Social Icons

.

Thursday, June 2, 2011

இதுவா போர் ???


இதுவா போர் ???




உலகில் ஏது கிழக்கும் மேற்க்கும்
அன்பு மட்டுமே அன்பை வார்க்கும் …

எல்லை கோடுகள் மனதில் எதற்கு… நன்பா
உள்ளத்தில் கோடு கிழித்தால் வெற்றியும் தோற்க்கும் …

வீரம் என்பது வார்தையில் இல்லை
வெற்றியும் தோல்வியும் உறவுக்குள் இல்லை …

வாழ்க்கையின் அர்த்தம் புரிந்தால்
வாராது என்றும் தொல்லை …

யாரோடு யார் பழி தீர்ப்பது
தேவை இல்லாமல் உள்ளம் வெறுப்பது …

கூடுகள் வேறு என்பதால்
கிளிகளேவா கிளிகளை கொல்வது …

அந்நியனை வெளியேற்ற போராடினோம் அன்று
அண்ணன் தம்பீ நமக்குள்ளே ரத்தம் பார்க்கிறோம் இன்று …

காலிலே புன்பட்டாலும் கண்ணில் தானே கண்ணீர் வழியும்
விட்டு விடு தோழா எதற்கு இந்த குத்தும் பழியும் …

பாரதி இருந்தால் அவன் உள்ளம் நோகும் …
ஏன் என்றால் அவன் தான் சொன்னான்


தமிழ்
இனி மெல்ல சாகும் !!!






1 comment:

  1. கண்ணீர் மிதகும் ஒரு பதிவு... கணத்த மனதுடன் மீண்டும் படிக்கிறேன் என்று முடியும் இந்த போர் தாகம்.......

    ReplyDelete

 

வாசித்தவர்கள்

இன்று ...

உங்கள் ஆதரவால் ...!

tamil blogs traffic ranking