Social Icons

.

Thursday, June 2, 2011

மட்டன் ரோஹன் ஜோஷ்


மட்டன் ரோஹன் ஜோஷ்

கஷ்மீர் பள்ளத்தாக்கில் உதித்த, சுவையான குழம்பு ரோஹன் ஜோஷ் என்றால் சிகப்பு கறி குழம்பு என்று அர்த்தம். அதில் சேர்க்கப்படும் சிவந்த மிளகாய்களாலும் இந்த பெயரை பெற்றது. சாதம் மற்றும் ரொட்டி வகைகளுடன் அற்புதமாக ருசிக்கும்.


தேவையான பொருள்கள் :

ஆட்டுக்கறி துண்டுகள் - 1/2 கிலோ
பெரிய வெங்காயம் - 1/2 கிலோ ; நீள வாக்கில் நறுக்கப்பட்டது
சமையல் எண்ணெய் - 6 மேஜைக் கரண்டி
கிராம்பு - 6
பட்டை - 2 இன்ச் துண்டு
கறுப்பு ஏலக்காய் - 2
பிரியாணி இலை - 2
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
சிவந்த கஷ்மீர் மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
சோம்பு பொடி - 1/2 தேக்கரண்டி
சுக்கு பொடி - 1/2 தேக்கரண்டி
தயிர் -1 1 கப் ; கடைந்தது
உப்பு - தேவைக்கேற்ப
கொத்தமல்லி - கை அளவு

செய்முறை :

1) ஒரு வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கிராம்பு, பட்டை, ஏலக்காய் மற்றும் பிரியாணி இலை சேர்த்து வறுக்கவும்.

2) பின்பு, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

3) வெங்காயம் பொன்னிறம் ஆனதும், இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.

4) பச்சை வாடை போனதும், கறித்துண்டுகளை சேர்த்து நன்கு வதக்கவும்.

5) கறி வதங்கி நிறம் மாறியதும், தேவையான அளவு நீர் ஊற்றி, கறி நன்கு வேகும் வரை சமைக்கவும்.

6) இப்பொழுது, மிளகாய் தூள், சோம்பு பொடி, சுக்கு பொடி, உப்பு கலக்கவும்.

7) அனைத்து மசாலாக்களும் நன்கு கலந்து நறுமணம் வரும்போது கடைந்த தயிர் ஊற்றி கலக்கவும்.

8) இவை 10 நிமிடம் கொதித்து ஒரு குழம்பு பதம் வந்த உடன், கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

No comments:

Post a Comment

 

வாசித்தவர்கள்

இன்று ...

உங்கள் ஆதரவால் ...!

tamil blogs traffic ranking