Social Icons

.

Wednesday, August 3, 2011

டினோசர் 4 - சிறப்பு அம்சங்கள்




டினோசர் 4 - சிறப்பு அம்சங்கள்
Dinosaur 4 – Salient Features

பற்கள் :

டினோசர் பற்கள் பல்வேறு வடிவங்கள் மற்றும் பல அளவுகளில் இருந்தன. டைரநோசரஸ் ரெக்ஸ் போன்ற மாமிச உண்ணிகள், இரையை கிழித்து உண்ண பெரிய கூர்மையான பற்கள் தேவைப்பட்டன. ஒவ்வொரு பல்லும் 15 செ.மீ. அளவுடையதாக இருந்தன. ஒரு டைனாசரின் பற்களை பார்த்தே அவை என்ன மாதிரியான உணவை உண்டன என்று விஞ்ஞானிகள் கணித்தனர்.



அபடோசாரஸ் போன்ற தாவர உண்ணிகளுக்கு மெலிதான நீண்ட கூர்மையற்ற பற்கள் இருந்தன. அவை மரங்களில் இருந்து இலைகளை பறித்து உண்பதற்கு எதுவாக வடிக்க பட்டதாக இருந்தது. இவ்வகை டைனாசர் மந்தைகள், ஒரு இடத்திலிருந்து புலம் பெயர்ந்து செல்வதற்கு முன் அங்கு இருந்த செடி கோடி புற்களை உண்டு தரைமட்டம் ஆக்கிய பின்னே நகர்ந்தன.



நீர்நிலைகள் அருகில் வாழ்ந்த சில வகை டைனாசருக்கு கூர்மையான கூம்பு வடிவ பற்கள் இருந்தன. அவை முதலை மற்றும் டால்பின்களின் பற்களை ஒத்து இருந்தன. இவற்றை கொண்டு எளிதில் வழுக்கி செல்லும் உணவுகளான மீன் போன்றவரை வசதியாக பிடித்து உண்டன. டைனாசர் 'பாரோநிக்ஸ்' இதற்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.



அது மட்டும் இல்லை நண்பர்களே, சில வகை டைனாசர்களுக்கு பற்களே இல்லாமல் இருந்தது என்பதை நீங்கள் அறிவீர்களா ? 'ஆர்நித்தோமைமஸ்' என்ற பறக்கும் வகை டைனாசருக்கு பற்களே இல்லாத கூர்மையான அலகு வடிவ வாய் இருந்தது. நம் முடிக்கற்றை மற்றும் நகங்களில் உள்ள அதே கடின பொருளால் அதன் அலகு செய்யப் பட்டிருந்தது. அதைக் கொண்டு தானியங்கள், சிறு பூச்சிகள், புழுக்கள் ஆகியவற்றை அந்த டைனோ - பறவைகள் கொத்தி தின்றன. அதன் பெரிய கண்கள் சிறு உணவையும் துல்லியமாக சுட்டிக்காட்டின.



கொம்புகள் :

'ட்ரைசெரடோப்ஸ்' என்ற தாவர உண்ணி டினோசார்க்கு மூன்று கொம்புகள் இருந்தன. அவற்றை எதிரிகளை விரட்டவும் சண்டை போடவும் பயன்படுத்தின. 'ட்ரைசெரடோப்ஸ்' பயங்கரமாக தோற்றமளித்தாலும், அதன் பெரும்பான்மையான நேரத்தை தாவரங்களை உண்பதிலேயே அமைதியாக கழித்தன.



கூரிய நகம் :

அநேக டைனாசர்களுக்கு கை கால் விரல்களில் கூரிய நகங்கள் இருந்தன. 'டீநோநீக்கஸ்' போன்ற மாமிச உண்ணிகள் இரையை பிடிக்கவும் கொல்லவும் தங்கள் கூரிய நகங்களை உபயோகப் படுத்தின. இவ்வகை டைனோசர்கள் துரிதமாக செயல்பட கூடியவை. திறமை மற்றும் பலம் வாய்ந்தவை. இவைகளின் நகங்கள் மற்றும் பற்கள் கத்தி போல கிழிக்க கூடியவை.



சாரோபோட் வகையைச் சேர்ந்த தாவர உண்ணி டைனாசர்களுக்கும் நகங்கள் இருந்தன. அனால் அவை தட்டையாக மழுங்கி இருந்ததால் அவற்றை இலை தழைகளை பறிக்கவே பயன்படுத்தின. அபடோசாரஸ் தன் விரல் நுனிகளை கல் மண்ணிலிருந்து காத்துக் கொள்ள நகங்களை பெற்றிருந்தன.

திகில் வால் :

டிப்லோடோகஸ்க்கு வேறொரு பட்டப்பெயரும் உண்டு. அது 'சாட்டை வால்' டைனாசர் என்பது ஆகும். இந்த டைனாசர் தன் வாலை சுழற்றினால் ஒரு பெரிய சாட்டையை சுழற்றும் போது உண்டாகும் ஒலியை ஏற்படுத்தும். இந்த வால் வித்தையைக் கொண்டு எதிரியை அச்சுறுத்துவது மட்டும் அல்லாமல் அதன் தோலை  கிழித்து ரணகளமாக்கும்.

  
கூர்முனை :

இதைப்போலவே இக்குவாநோடான்என்ற தாவர உண்ணி டைனாசர் கைகளில் கூர்முனைகள் இருந்தன. அவை இரையை பறிக்க அதை பயன்படுத்தவில்லை. மாறாக ஏதேனும் மாமிச பட்சினிகள் தாக்க ஆரம்பித்தால் தன்னை காத்துக் கொள்ள குத்து வாளைப் போல பயன்படுத்தின.


கண் :

மனிதர்களைப் போலவே டைனாசர்களும் ஐம்புலன்களை பயன்படுத்தின. ட்ரூடான் என்ற பறவை இன டைனாசருக்கு மிக பெரிய கண்கள் இருந்தன. அவைகள் இருட்டில் வேட்டையாடவே இந்த பெரிய கண்கள் இருந்தன போலும்.

டைனாசர்கள் எவ்வாறு முழங்கின என்பது இவ்வளவு ஆராய்ச்சிகளுக்கு பிறகும் கண்டுபிடிக்க படாத உண்மை ஆகும். ஆனால் பாராசாராலாபஸ் என்ற டைனாசர்கள் தான் வாயாடி(டன்)கள் என்று கணித்துள்ளனர். இவைகள் தலையில் ஒரு பெரிய கொண்டை போன்ற அமைப்பு இருந்தது.  அதில் இருந்த வெற்றுவெளியாலான எலும்பின் மூலம் அவைகள் பிளிறி மிகுந்த சத்தத்தை ஏற்படுத்தி இருக்க கூடும் என்று நம்புகிறோம்.




உங்களுக்கு தெரியுமா ?

டைனாசர்கள் என்ன வண்ணத்தில் இருந்தன என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. திரை படங்களில் பார்க்கும் பல்வேறு டைனாசர்களின் வண்ணம் எல்லாமே ஊகம் தான்.

அடுத்த பகுதியில் டைனாசர்களின் இனப்பெருக்கம் மற்றும் குழந்தை வளர்ப்பு பற்றி தெரிந்து கொள்ளலாம். 


டைனாசர் 1 - முதல் பகுதிக்கு செல்ல இங்கே சொடுக்கவும் !
டைனாசர் 2 - இரண்டாம் பகுதிக்கு செல்ல இங்கே சொடுக்கவும் !
டைனாசர் 3 - மூன்றாம் பகுதிக்கு செல்ல இங்கே சொடுக்கவும் !
டைனாசர் 5 - ஐந்தாம் பகுதிக்கு செல்ல இங்கே சொடுக்கவும் !
டைனாசர் 6 - இறுதி பகுதிக்கு செல்ல இங்கே சொடுக்கவும் !


9 comments:

  1. டைனோசர் பற்றிய வித்தியாசமான, விரிவான அலசல். உங்களின் இப் பதிவினூடாகப் பல புதிய தகவல்களை அறிவியலோடு சேர்த்து டைனோசர் பற்றி அறிந்து கொண்டேன்.

    ReplyDelete
  2. தமிழ் 10,இண்ட்லி ஓட்டுப் பட்டை இணைக்கலையா?

    ReplyDelete
  3. Nice.,
    Mobilil comment poduvathaal template comment thaan. sorry.

    ReplyDelete
  4. ஆஹா...என்ன அருமையான வர்னணைகள். ஆழமான அலசல்கள்.
    யாழினி....இத்தனை தெளிவான பதிவிற்கு இரண்டே இரண்டு சாத்தியங்கள் தான் இருக்கக்கூடும்.
    1.முன் ஜென்மத்தில் நீங்களே ஒரு டைனாசராக இருந்திருக்கக்கூடும்.
    2.டைனாசர்களின் ஆவி தினமும் உங்கள் கனவில் வந்து தன்னை பற்றி உரைக்கக்கூடும்..ஹா..ஹா...ஹா...!

    ஆனால்....எத்தனை நெருக்கமான ஒரு ஆய்வு...ஆழ்ந்த அலசல்கள்.

    ReplyDelete
  5. மிக எளிய தமிழில் ஒரு அறிவியல் ஆக்கம். படிக்க படிக்க ஆவலைத்தூண்டும் விதமாக அமைந்துள்ளது டைனோசர்கள் பற்றிய இத்தொகுப்பு. இதன் நான்காம் பாகம் எப்போது வெளிவரும் என்ற ஆவலில் காத்துக்கொண்டிருக்கிறேன். தங்களின் இவ்வாக்கத்திற்கு எனது பாராட்டுக்களும் நன்றிகளும்.

    - இனியன், பிரான்ஸ்

    ReplyDelete
  6. நிரூபன் சகோ, வெகு காலம் முன்பே அழிந்து விட்ட இந்த அரிய உயிரினத்தை பற்றி இன்னமும் எழுத ஆவல், உங்கள் ஆதரவில் செய்து முடிப்போம். நன்றி.

    தமிழ் 10 ஓட்டு பட்டை இணைத்துவிட்டோம், நீங்கள் பரிந்துரைக்கும் தளங்களிலும் இணைய விருப்பம், முயற்சி மேற்கொண்டிருக்கிறோம்.

    ReplyDelete
  7. கருன் சகோ, ஹா ஹா ஹா....

    பின்னூட்டம் எதில் செய்தால் என்ன? ஊக்குவிக்கும் மனதிற்கு முழு மதிப்பெண்கள். நன்றி

    ReplyDelete
  8. ராஜேஷ், சக மனுஷியாக என்னை பார்த்தால் போதும் நண்பரே. உங்களை போலுள்ள அபிமானிகளை திருப்தி படுத்தும் விதமாக, டைனாசர் கனவில் வருவது என்னவோ உண்மை தான். ஹா ஹா ஹா. தங்கள் ஆதரவிற்கு நன்றி.

    ReplyDelete
  9. இனியன் அவர்களே ,தமிழில் வெகுவாக இது போன்ற அறிவியல் மற்றும் விலங்கியல் பதிப்புகள் காணக் கிடைப்பதில்லை. ஆதலால் தான் நாங்களும் ஆவலுடன் தங்கள் பார்வைக்கு இவற்றை சமர்ப்பிக்கிறோம். உங்கள் பாராட்டிற்கு மனமார்ந்த நன்றி. தொடர்ந்து வருக.

    ReplyDelete

 

வாசித்தவர்கள்

இன்று ...

உங்கள் ஆதரவால் ...!

tamil blogs traffic ranking