Social Icons

.

Wednesday, June 1, 2011

ஃபேஷியல் (அ) முகப்பூச்சு



  

ஃபேஷியல் () முகப்பூச்சு

நம் புற சருமம், நம் அக ஆரோக்கியம் மற்றும் நலத்திற்கு கட்டியம் கூறுகிறது. சரியான ஆகாரம், சிறிது உடற்பயிற்சி, மற்றும் அளவான அழகூட்டல் நம் தோற்றத்திற்கும், நம் மனதில் தோன்றும் உற்சாகத்திற்கும் காரணமாக அமைகிறது.

நம் சருமம் நமக்கு இரு வகைகளில் உதவி புரிகிறது. ஒன்று பாதுகாப்பு (அந்நிய நச்சு கிருமி மற்றும் நோயிலிருந்து) மற்றொன்று பெயர்ச்சி (உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றல்). இவ்விரண்டு செயல்களின் பாதிப்பினால் சருமம் சோர்ந்துவிடக்கூடும். இது போன்ற தருணங்களில் வழக்கமாக மேற்கொள்ளும் அழகியல் பராமரிப்புகளை தாண்டி சற்று பிரத்யேக கவனம் நம் சருமம் எதிர்பார்க்கிறது.



ஃபேஷியல் எனப்படும் முகப்பூச்சு இது போன்ற தருணங்களில் சரும பாதுகாப்பிற்கு வரப்பிரசாதமாக விளங்குகிறது. நம் சருமத்தின் துவாரங்களை சுத்தபடுத்தி, சருமதிற்கு தேவையான சத்துக்களை சேர்க்க இது வெகுவாக உதவுகின்றது. ஃபேஷியல் மூலம் சரும துவாரங்கள் சுத்தமாகி, அசுத்த அணுக்கள் நீங்கி ,தூய்மையான தோற்றதிற்கு வழிவகுத்து, நம் பொலிவை கூட்டுகிறது. ஆதலால் தான் உடல் மசாஜ்க்கு பிறகு ஃபேஷியல் சருமதிற்கான ஒரு சிகிச்சையாக கருதப்படுகின்றது. அசுத்தங்களை நீக்குவதால் இது "டீப் க்ளென்ஸிங் ஃபேஷியல்" மற்றும் "டீப் போர் க்ளென்ஸிங்" என்று இருவகையாகவும் கூறப்படுகின்றது.

ஃபேஷியலின் நன்மைகள் என்ன ?

உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஃபேஷியல் மிகவும் பயனுள்ளது என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. வெய்யிலினால் ஏற்படும் சரும பாதிப்புகள், சருமத்தின் அழுகிய அணுக்கள், முகசுருக்கங்கள், சருமத்தில் மூப்பின் சுவடுகள்,முகத்தில் தோன்றும் தேமல்கள் இவை அனைத்தையும் போக்க ஃபேஷியல் ஒரு சிறந்த சிகிச்சை ஆகும் என கூறினாலும் மிகையாகாது.



25 வயது தொடங்கும் பொழுது சருமத்தில் வயதின் பாதிப்புகள் தோன்ற தொடங்குகின்றன. ஆக இதுவே ஃபேஷியலை தொடங்க சரியான வயது எனலாம். மும்பையை சேர்ந்த பிரபல தோல் மருத்துவர் டாக்டர் அப்ரதிம் கொயெல் அவ்வப்போது செய்யும் ஃபேஷியலால் நாம் உபயோகப்படுத்தும் "ஆன்ட்டி-ஏஜிங்" பொருள்கள் நம் சருமத்தில் ஊடுருவி நல்ல பலனை தர உதவுகிறது என்று கூறுகிறார்.

இந்திய அழகு கலையின் முன்னோடி மற்றும் ஃபேஷியலில் ஜாம்பவானான "ஷாஹ்னாஸ் ஹூஸைன்" கூறுவதாவது, ஃபேஷியல் சருமத்தின், எண்ணெய் பசையை பராமரிப்பது மட்டும் அல்லாமல், அதில் அமிலம்-காரத்தின் அளவை செவ்வனே கட்டுப்படுத்துகிறது. 30 வயதிற்கு பிறகு மாதம் ஒரு முறை ஃபேஷியல் செய்கையில், மூப்பு சுவடுகளை நீக்கி, சரும தசைகளை வலுவாகி மிகவும் பொலிவுடன் தோன்ற உதவுகிறது என்பது அவர் கருத்து.

ஒவ்வொரு ஃபேஷியலும் எளிய வழிமுறைகளை பின்பற்றுகிறது. அவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன் உண்டு.

டீப் க்ளென்ஸிங் மற்றும் டோனிங் : க்ளென்ஸிங் என்ற சுத்தபடுத்தும் திரவத்தால், முகத்தை சுத்தபடுத்தும் பொழுது, உடனே முகம் அழுக்குகள் நீங்கி, புத்துணர்ச்சி பெறுகின்றது.இது நன்றாக சருமத்தின் ஆழத்தில் ஊடுருவதால் சருமத்தின் ரத்தஓட்டம் சீராக்கபட்டுமாசுக்களையும், அழுக்குகளையும் உடனே நீங்க செய்கிறது. இதே நேரம் டோனிங் மூலம் புதிய சரும அணுக்கள் உருவாகி முகத்திற்கு உறுதியும், நெகிழ்வும் அளிக்கப்படுகிறது.



சருமத்தின் ஆய்வு : சரும வல்லுநர் பிரகாசமான உருபெருக்கி ஒளியின் (மேக்னிஃப்யிங் டார்ச்) மூலமாக உங்கள் சருமத்தை ஆராய்ந்து அதில் உள்ள நிறை குறைகளை கண்டறிகிறார்.



வெளியேற்றல் : தாங்கள் விரும்பும் ஃபேஷியல் முறையை பொறுத்து, வெளியேற்றும் சாதனம் வேறுபடுகிறது. சருமம் நன்றாக சுவாசிக்கவேண்டி, "ஆன்ட்டி-ஆக்ஸிடெண்ட்" என்ற பொருளால், அழுக்குகள், அழுகிய சரும அணுக்கள் ஆகியவை நீக்கப்படுகின்றன. இவ்வாறு செய்கையில், பழைய அழுக்குகள் நீங்கி புது பொலிவும், புத்துணர்வும் சருமத்திற்கு கிடைக்கிறது.இ ந்த முறையால் அடைபட்ட துவாரங்களை சுத்தபடுத்தி, சருமம் எந்த பாதிப்புக்கும் ஆளாகாமல், பொலிவு பெற ஏதுவாகிறது.



மசாஜ் : ஃபேஷியலின் சுகமான ஒரு பகுதி மசாஜ் ஆகும். ஒரு லயதிற்குட்பட்டு முகத்தில் புரியும் அழுத்தங்களினால் முக தசைகள் இறுக்கம் தளர்ந்து லேசாகின்றன. இதனால் ரத்த ஓட்டம் அதிகரித்து, சருமத்திலிருந்து கழிவுகளை வெளியேற்றி, முகத்தில் சுருக்கங்கள் தோன்றாமல் பேணப்படுகின்றது.



ஃபேஸ் மாஸ்க் : வெள்ளையாக்க, உறுதியாக்க, விட்டமின் சி நிறைந்த பல மாஸ்குகள் கிடைக்கின்றன. முகத்தின் உபரி எண்ணெய் நீங்க, துவாரங்கள் இறுக்கமாக, சருமத்தில் ஈரப்பதம் சேர்க்க என மாஸ்குகள் பல விதத்தில் பயன்படுகின்றன. மூலிகை மாஸ்குகளும் புதிய சரும அணுக்கள் உற்பத்திக்கு பெரும் உதவி செய்கின்றன.



உங்கள் அழகியல் அட்டவனையை நீங்களே தேர்ந்தெடுங்கள் :

உங்கள் சருமத்திற்க்கு அதிகபட்ச பலனை தரும் ஃபேஷியலை தேர்ந்தெடுப்பது மிக அவசியமாகும்.

உணர்ச்சியுள்ள மற்றும் அதிக பருக்கள் உள்ள முகத்திற்கு : இது போன்ற முகத்திற்கு ஃபேஷியல் உகந்தது அல்ல, எண்ணெய் பசை உள்ள முகம், உணர்ச்சி மிகுந்த சருமம், பருக்கள் அதிகம் காணப்படும் முகம், மற்றும் "ரோஸாஷியா" போன்ற சரும நிலையை பெற்றவர்கள் ஃபேஷியலை தவிர்த்து முகத்தை நன்கு கழுவி சுத்தபடுத்தினாலே போதுமானது என்கிறார் டெல்லியை சேர்ந்த சரும வல்லுநர் டாக்டர் சாருலதா போஸ்.

சாதாரண மற்றும் எண்ணெய் சருமம் : அழகியல் நிபுணர் ஹூஸைன் அவர்களின் கருத்துப்படி, அடிப்படையான பழசாறு ஃபேஷியல் அல்லது ஆக்சிஜன் ஃபேஷியல் முறை உங்களுக்கு பொருந்தும். அடிப்படை சுத்தபடுத்தல் மற்றும் டோனிங் இம்முறையில் சாத்தியமாகும்.

உலர்ந்த சருமம் : கெட்டியான க்ரீம்களை கொண்டு மசாஜ் செய்யபடும் ஃபேஷியலை தேர்ந்தெடுங்கள். இத்தகைய க்ரீம்கள் சருமத்தின் ஆழத்தில் ஊடுருவி, அதற்கு ஈரத்தன்மையை அளிக்கும் என டாக்டர் போஸ் கூறுகிறார்.

ஃபேஷியல் யாரால் செய்யப்படுகின்றது :

ஃபேஷியலில் நன்கு பயிற்சி பெற்ற வல்லுநர்களை கொண்டு தான் செய்து கொள்ள வேண்டும் என்பது டாக்டர் போஸ் பொன்றோரின் கருத்தாகும். அவ்வாறு பயிற்சி பெற்றவர்களால் மட்டுமே முகத்தின் பதம் அறிந்து, சரியான முறையில், தொழில் பக்தியுடன் இப்பணியை செய்ய இயலும் . இவ்வாறு இல்லாமல் அன்னியர்களிடம் ஃபேஷியல் செய்து கொள்ளும் பட்சத்தில், அழுத்தத்தின் வேறுபாட்டால் முகத்தில் மேலும் சுருக்கங்கள் தோன்றும் வாய்ப்புகள் உள்ளன.

அங்கீகரிக்கப்பட்ட அழகியல் வல்லுநர்கள் மட்டுமே சரும பாதுகாப்பில் த்குந்த பயிற்சி பெற்றிருப்பார்கள்.ஆகையால் அவர்களிடம் மட்டுமே, ஈடுபாட்டுடன், தொழில் நேர்த்தியும் காணப்படும்.



கவனத்தில் கொள்ளவேண்டியவைகள் :

1) உங்கள் மீது பயன்படுத்தபடும் உட்பொருள்களை அறிந்துகொள்ளுங்கள்.

2) ஏதேனும் பொருளினால் உங்களுக்கு "அலர்ஜி" உண்டா என தெரிந்துகொள்ளுங்கள். அவ்வாறு "அலர்ஜி" இருப்பின், முதலில் சிறிய பகுதியில் மட்டும் அப்பொருளை பயன்படுத்தி ஊர்ஜிதப்படுத்திகொள்ளுங்கள்.

3) இயற்கை பொருள்களை உங்கள் நிபுணர் பயன்படுத்தினால், அவைகள் வாடாத புதியவைகளாகவும், ஃப்ரெஷ்ஷானவைகளாகவும் உள்ளதா என் உறுதிபடுத்திகொள்ளுங்கள்.

4) முகத்தில் காணப்படும் பருக்களை கிள்ளி எடுக்காதீர்கள், அவ்வாறு செய்தால், முகத்தில் நிரந்தர வடுக்கள் உருவாக வாய்ப்புள்ளது.

5) நீங்கள் செல்லும் அழகு நிலையம் எந்த வித பிணிகளுக்கும் இடம் தராமல் சுத்தமாக பராமரிக்கபடுகிறதா என சோதித்துகொள்ளுங்கள்.



ஃபேஷியல் செய்துகொள்ள ஆகும் செலவினங்கள் :

சிறிய நகரங்களில் அடிப்படை ஃபேஷியல் செய்துகொள்ள ரூபாய் 1300 வரை ஆகும். இதுவே பெருநகரங்களில் சற்று கூடுதலாக காணப்படும். ஃபேஷியல் வல்லுநர்கள்களிடம் சென்றாலோ, ஹோட்டல் மற்றும் ரிசார்ட்டுகளிலோ கட்டணம் அதிகரிக்கும். மாஸ்க் மற்றும் சீரம்களை பயன்படுத்துகையில் இக்கட்டணம் மேலும் அதிகம் ஆகலாம்.

எவ்வப்போது ஃபேஷியல் செய்துகொள்ளலாம் :

இது தனிநபரை பொருத்து மாறும் விஷயமாகும். நம் சரும அணுக்கள் மாதத்திற்கு ஒரு முறை புதுப்பிக்கபடுவதால், மாதம் ஒரு முறை ஃபேஷியல் செய்துகொள்வது சிறந்ததாகும் .குறைந்தபட்சம் வருடத்திற்கு 4 முறை பருவ மாற்றதிற்கேற்ப்ப ஃபேஷியல் செய்துகொள்வது நன்று. பருக்கள் தோன்ற தொடங்கும் நேரத்திலேயே அடிக்கடி ஃபேஷியல் செய்து கொள்வது சருமத்தை சீராக வைத்துகொள்ள உதவும்.




4 comments:

  1. பெண்களுக்கான பதிவு..
    நான் எஸ்கேப்..

    ReplyDelete
  2. வணக்கம் சௌந்தர்....

    ஃபேஷியல் என்பது சரும அழகு மட்டுமல்லாது ஆரோக்கியத்திற்காக அனைவரும் பின்பற்ற வேண்டிய ஒன்று. மற்றும் ஒரு ஆய்வறிக்கை, பெண்களை விட ஆண்கள் தான் ஃபேஷியல் செய்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டுவதாக தகவல் வெளியிட்டுள்ளது.

    அதனால், நீங்கள் எங்கேயும் எஸ்கேப் ஆக வேண்டாம். இருந்து ஆற அமர படியுங்கள், நன்பா !

    ReplyDelete
  3. Ladys Section.., Facial podura naala Skin disease varathaa ? (chemical side affect ) yenga amma yenayum Facial potuka sonaanga., but nan tha athelam POmpalainga samachaarm soli refuse paniten., MugaM Alangaaram yengathu Oorai yemaathu oru Kalai yenbathu thaan my point of view.

    Yeppovumey Originality Tha Standard., Facial yenbadu yedarkaaha ? Just for Good looking and it make self confident.Its Usefull for Employee's only. JOb la irukravunga facial use panradu thappu ila bcz should b good looking ecspeialy customer service Field both men/women. .,

    Veetla Seriel Paathukitu irukra house maid ku yeduku Facial ,? Padikra Students ku Facial Yeduku ? Thevai ilai..,

    yennai madiri naturaly Handsome ha irukra pasangalukum Facial Unneccassry Thaan yendu Soli Ithutan yen karuthai Mudithu KolHIren., Nanri Vanakam !!! hehhe lolzzz

    ReplyDelete
  4. RAJESH K, ஃபேஷியல் என்பது நம்மை அழகுபடுத்திகொள்ள மட்டுமல்லாது, நம் சருமத்தை பாதுகாத்துகொள்ளவும் தான். இது அழகை விட ஆரோக்கியத்திற்கு உதவுகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

    சில ஆண்கள் தங்கள் துணைவியின் அக அழகை புரிந்துக்கொள்ளாமல்,குடும்ப வாழ்க்கையை குலைக்க முற்படுவதால் தான் வீட்டில் தொடர்கள் பார்த்துக்கொண்டிருக்கும் மகளிர் இது போல் தங்களை பேணிக்கொள்ளும் அவசியம் ஏற்படுகிறது என்பது யாழ் இனிதின் எண்ணம். நாகரீகத்தின் ஒவ்வொரு வளர்ச்சியையும் இவ்வாறு ஒரு கண்ணோட்டத்தோடு பார்த்தால், மனிதன் குரங்கை தாண்டி வளர்ந்து இருக்க மாட்டான்.

    ஃபேஷியல் செய்துகொள்வதும் கொள்ளாததும் அவரவர் விருப்பம், அதை பற்றிய விழிப்புணர்வுக்கு மட்டுமே இக்கட்டுரை இங்கு பதிக்கப்பட்டுள்ளது.
    உங்கள் கருத்திற்கு நன்றி.

    ReplyDelete

 

வாசித்தவர்கள்

இன்று ...

உங்கள் ஆதரவால் ...!

tamil blogs traffic ranking