Social Icons

.

Monday, June 27, 2011

எங்கு போனது என் இதயம் ?


எங்கு போனது என் இதயம் ?






அகராதியில் தேடி பார்த்தேன், கிடைக்கவில்லை
அனைத்து திசைகளிலும் சென்று பார்தேன், நடக்கவில்லை
ஆகாயத்தில் பார்த்தேன்
ஆவாரம்பூவிடம் கேட்டேன்
 
அடடாஎங்கு போனது என் இதயம் ?

அலைந்து போய் உன்னிடம் வந்தேன்
அழகான புன்னகை நீ செய்த போது தான் புரிந்தது
அது உன்னிடம் துடிக்கிறது என்று …..
பத்திரம் கண்ணேஉடைத்து விடாதே !

பட்டாம்பூச்சி கூட புழுவாய் இருந்து தான்
சிறகும் பெற்று, வண்ணமும் பெருகிறது
நீ மட்டும் பிறந்த உடனே எப்படி பறக்கிறாய் ???

தாமரை மலரும் கூட சேற்றில் தான்
தன் மொட்டுகளை விரிக்கிறது
நீ மட்டும் எப்படி சந்தனத்தில் மொட்டவிழ்த்தாய் ???
 
சூரியகாந்தி மலர் கதிரவனை நோக்கி மலர்வது போல்
சூனியமாக இருந்த நான் பூரணம் ஆகிறேன்
உன் திறமையின் வியப்பில் அசந்து போகிறேன் !!!


7 comments:

  1. என்ன ஒரு அருமையான கவிதை. என்னுள் உள்ள காதலை நினைவு படுத்தியது. எனது காதலின் பசுமையான நினைவுகளை மறுபடியும் நினைவூடிதற்கு நன்றி.

    ReplyDelete
  2. நற்சிந்தனைக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. @ Youth ....
    நன்றி யூத் !

    @ அரசன் ....
    தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி அரசன் !

    ReplyDelete
  4. யாழினி

    தாங்கள் தங்கள் கவிதை தொகுப்பிற்கு இட்ட தலைப்பு எழுத்து பிரசவம். என்னே அருமையான தலைப்பு . இத்தலைப்பை சிறிது நேரம் யோசித்து பார்த்தேன். அப்போது தான் புரிந்தது அதன் உள் அர்த்தம். (இது என் மனதிற்கு எட்டிய கருத்து) கவிஞரின் மனதில் பிரசவிக்கும் (உருவெடுக்கும்) வார்த்தைகள் வார்த்தைகள் ஒன்று சேர்ந்து கவிதை ஆகிறது. யாரும் சட்டென்று புரிந்து கொள்ள முடியாததாக இருந்தாலும் மிகவும் அருமையான தலைப்பு. தற்போது என் மனதை கவர்ந்த யோசிக்க வைத்த தலைப்பு.

    மிக்க நன்றி யாழினி

    ReplyDelete
  5. உங்கள் பாராட்டிற்கு நன்றி மனோஜ் !

    ReplyDelete
  6. Bala SVG, வருக நண்பா ! வணக்கம் !!

    உங்கள் ஊக்கமான கருத்திற்கு நன்றி !

    ReplyDelete

 

வாசித்தவர்கள்

இன்று ...

உங்கள் ஆதரவால் ...!

tamil blogs traffic ranking