Social Icons

.

Wednesday, June 29, 2011

கண்ணுறங்கு கண்மணியே !


கண்ணுறங்கு கண்மணியே !

கொஞ்சம் பால், குறைவில்லாத தூக்கம் என்ற சான்றோர் மொழி எப்போதும் பொய்த்ததில்லை.



நல்ல உணவு ஒரு நல்ல தூக்கத்திற்கு வழி வகுக்கிறது என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. யாரொருவர் மாதத்திற்கு 5 முறை தூக்கத்திற்கு சிரமப்படுகிறார்களோ, அடிக்கடியோ, விரைவாகவோ தூக்கம் கலைந்து விடுகிறார்களோ, அவர்கள் தூக்கமின்மை அல்லது இன்சோம்னியா எனும் குறைபாடு உள்ளவர்கள் என நியு டெல்லியை சேர்ந்த மாக்ஸ் நிறுவனத்தின் உணவுகட்டுப்பாட்டு வட்டார தலைவர் ரித்திகா சம்மத்தர் தெரிவிக்கிறார். கட்டுப்பாடில்லாத உணவு முறை, மற்றும் ஒருவரின் மருத்துவ நிலைமை இதற்கு காரணமாக கூறப்படுகிறது.



இவ்வாறான அறிகுறிகள் தென்படுகையில், உணவுமுறையில் சீர்திருத்தம் செய்யாவிடில், பின்னர் தூக்க மாத்திரையின் உதவி நாட வேண்டிவரும். சரியான உணவு என்பது காலோரிகளில் சார்ந்தது மட்டுமல்ல, அதே நேரம் எல்லா வகை உணவும் இதற்கு மருந்தாகாது. 

ஹோல் ஃபுட்ஸ் இன்டியா வின் இயக்குனரும், உணவியல் வல்லுநருமான இஷி கோஸ்லா கூற்றுப்படி,சில வகை உணவுகளில் கலந்துள்ள "ட்ரிப்டோஃபேன்" எனும் வேதியியல் பொருள், நம் மூளையில் தூக்கத்தை ஊக்குவிக்கும் "செரொடொனின் மற்றும் மெலொடொனின்" என்ற சுரப்பிகளை தூண்டுகின்றன.

போதுமான "செரொடொனின்" நமக்கு நல்ல ஆழ்ந்த உறக்கத்தை அளிக்கின்றன. பால், தயிர், வாழைபழம், செர்ரி, மீன், ஒட்ஸ், கோதுமை ப்ரெட், சாமந்தி தேனீர் மற்றும் பச்சை காய்கறிகள் போன்ற உணவுகளில், மிகுந்த அளவு "ட்ரிப்டோஃபேன்" அடங்கியுள்ளது. அதோடு, கோதுமை தவிடு, பாதாம், முந்திரி, கடற்பாசி மற்றும் வடிப்போனொதியில் மெக்னீசியமும், கோதுமைமுளை, சூரியகாந்தி எண்ணை மற்றும் விதையில் விட்டமின் B 6 உம் B 12 உம் இருப்பதால், இவைகள் தூக்கத்திற்கு உற்ற தோழனாக விளங்குகின்றன.




ஆகையால் இது போன்ற பொருள்கள் தினமும் சேர்க்கப்பட வேண்டும். அதே நேரத்தில், அதிக காலோரிகள் மற்றும் காரமான உணவு வகைகள் ஜீரணம் ஆவதில் நேரம் பிடிக்கும்.அளவுக்கு அதிகமான இனிப்பு, காஃபி மற்றும் நிகோடின் நம் மூளைக்கு ஓய்வு அளிக்காமல், மூளையை இன்னும் சுறுசுறுப்பாக்க வல்லவை ஆகும்.

நிரந்தரமான சமச்சீர் உணவு முறை, சிறிது உடற்பயிற்சியை மேற்க்கொண்டு, இரவு வெகு நேரம் விழித்திருத்தல், நொறுக்கு தீனி, சிகரெட் மற்றும் குடிபழக்கம் இவைகளை விட்டுவிட்டால் நிம்மதியான உறக்கம் உங்கள் விழிகளில்.

சிறிது ஆழமாக ஆராய்ந்தால் :

ஜெர்மனியில் மேற்கொள்ளப்பட்ட உள்நோய் மருந்தியல் ஆராய்ச்சி கட்டுரை, பச்சை காய்கறிகள், பசலைக்கீரை, பச்சை பூக்கோசு போன்றவைகளில், மன இறுக்கத்தை குறைத்து, நிம்மதியான உறக்கத்திற்கு உதவும் தன்மை உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



கோதுமைத் தவிடில், செரொடொனின் மற்றும் மெலொடொனின் மட்டுமில்லாமல், மக்னீசியம் இருப்பதால் அவை தசைகளை இறுக்கம் தளர செய்யவல்லவை ஆகும். லேசாக வாட்டி எடுத்து சிறிது தேனுடன் உட்கொண்டால் மிகவும் பயனுள்ளதாக இது அமையும்.

பால் மற்றும் வாழைபழத்தில் அதிக அளவு சுண்ணாம்பு சத்து இருப்பதால், இவை மூளையில் ட்ரிப்டொஃபேனை பயன்படுத்தி, மெலொடொனினை வேகமாக சுரக்க செய்யும். காலை உணவிற்கு சிறந்ததாக இது கருத்ப்படுகின்றது.

சரியான நேரம் :

தூக்கத்திற்கு 2 மணி நேரம் முன்னரே உணவருந்தி விட்டால்பின்னர் உடலின் ஜீரண மணடலம் எந்த வித கோளாறுமின்றி உறங்க துணையாக இருக்கும்.




தவிர்க்க வேண்டியன :



மது மூளைக்கு மயக்கம் தரும் என்ற நம்பிக்கை உண்மையில்லாத ஒன்று. ஏனென்றால், இது நம் உடலின் நீரை சுண்டவைத்துவிடும். ஆகையால் மது நடு இரவில் தாகம் ஏற்படுத்தி உங்களை விழிக்க செய்துவிடும்.

பொறித்த மற்றும் காரமான உணவை இரவில் தவிர்ப்பது நன்று.  ஏனென்றால், இவை உங்கள் ஜீரணசக்தியை தூண்டிவிட்டு ஆழ்ந்த உறக்கததிற்கு தடை விதிக்கும்.அ டுத்த முறை பொறித்த கோழியை சுவைக்கும்முன், சற்று சிந்தித்து பாருங்கள்.

கஃபைன் குறைந்தது 14 மணி நேரம் செறிமானமாகாமல் இருக்கும்ஆகையால் நள்ளிரவில் காபி அருந்துவதை முற்றிலும் தவிர்க்கவும். 






9 comments:

  1. மிகவும் அருமையான விழிப்புணர்ச்சி கட்டுரை. இன்றைய வாழ்க்கை முறையில் தூக்கமின்மை பரவலாக மக்களிடம் காணப்படுகிறது. அதற்கு சரியான தீர்வுகள் இக்கட்டுரையில் உள்ளன.

    மக்களுக்கு உதவும் இது போன்ற கருத்துள்ள இடுகைக்கு மன்மார்ந்த நன்றி மற்றும் பாராட்டுக்கள்

    ReplyDelete
  2. நல்ல பதிவு பகிர்வுக்கு நன்றிகள்

    ReplyDelete
  3. @ Rajesh,
    ஆதரவிற்கு நன்றிகள் ...

    @ சந்ரு,
    நன்றிகள் சந்ரு, மீண்டும் வருக !

    ReplyDelete
  4. படுத்ததும் உறங்கியவன் பாக்கியவான் என்பது நம் முன்னோர் வாக்கு. இரவு 9 முதல் அதிகாலை 5 மணிவரை தூங்கும் தூக்கத்திலயே உடம்புக்கு தேவையான ஒய்வு கிடைக்கும் என்று மருத்துவ சான்றுகள் தெரிவிக்கின்றன.
    பகல் 12 மணி நேரத்தை விட இரவு 7 மணி நேர தூக்கம் மேலானது; எனவே சிந்தித்து செயல்படுவோம்.

    ReplyDelete
  5. இக்கட்டுரைக்கு மேலும் தகவல் சேர்த்தமைக்கு மனமார்ந்த நன்றி கீப்-ஸ்மைல். தாங்கள் கூறியது போல், பகல் நேர தூக்கத்தை விட இரவு தூக்கம் நம் ஆரோக்கியத்திற்கு நல்லது.

    தங்கள் கருத்திற்கு நன்றி.

    ReplyDelete
  6. Thookam., yen life la romba Importand visayam., Past 6 yrs ha naan olunga thoonga mudyama romba avathy padugiren.,Oru naalaiku 4 hrs tha thoonga mudyudu last 6 yrs ha., Ithunaala yen Health ku paadipu varum nu nallavey theryum but yenala control pana mudyala., Future la Naan Elantha Thookam., Health balance pana mudyumaa ? As a Normal Health Kondu vara mudyumaa ? Is it Possible ., bcz ipo yenala JOb la concentrate pana mudyala., Over Tension, emotional .Short Temper without reason. Yennala Elantha Health < thookam Thiruma Pera Mudyuma ? is it possible ?? I hope ur fav Rely Yazh Inidhu..

    Thank You
    Rajesh Kathiresan

    ReplyDelete
  7. RAJESH K, தூக்கம் என்பது எல்லோருக்கும் மிக முக்கியமான தேவை. உங்கள் பதிலை கண்டால்,உங்கள் உடல்நலனில் உறக்க பற்றாகுறை இருப்பது போல் தோன்றுகிறது. நீங்கள் ஒரு மருத்துவரை அணுகுவது சாலச்சிறந்தது. நன்றி.

    ReplyDelete
  8. !* வேடந்தாங்கல் - கருன் *!, வருகைக்கு நன்றி.

    ReplyDelete

 

வாசித்தவர்கள்

இன்று ...

உங்கள் ஆதரவால் ...!

tamil blogs traffic ranking