Social Icons

.

Friday, August 19, 2011

பட்டாணி புலாவ் ( பீஸ் புலாவ் )




பட்டாணி புலாவ் ( பீஸ் புலாவ் )
Peas Pulao



பீஸ் புலாவ் என்பது பெர்சிய நளபாகத்தில் இருந்து, முகலாய மன்னர்களால் இந்தியாவிற்கு தருவிக்கப் பட்ட ஒரு நறுமணம் மிக்க உணவு வகை ஆகும். பல நூற்றாண்டுகளாக இந்த உணவு, இந்திய சமையல் அறைகளில் முதல் இடம் வகிக்கிறது. பாரம்பரிய உணவான இதை ஆட்டுக்கறி மற்றும் லவங்க பட்டை கரம் மசாலா பொருள்களை கொண்டு சமைப்பர். சைவ பிரியர்கள் கறியை தவிர்த்து பல காய்கறிகளையோ அல்லது பனீர், காளான் ஆகியவற்றையோ சேர்த்து விதவிதமாக உண்ணலாம்.

யாழ் இனிதின் வாசகர், தோழர் ராஜசேகர் கோரிக்கைக்கு இணங்க, அவர் கேட்ட பீஸ் புலாவின் ருசியான செய்முறை இதோ !

செய்பொருள்கள் :

தரமான பச்சரிசி - 1 கோப்பை

தண்ணீர் – 2 ½ கோப்பை

கெட்டியான தேங்காய் பால் - ½ கோப்பை

பச்சை பட்டாணி -  ½ கோப்பை

நெய் - 2 தேக்கரண்டி

சமையல் எண்ணெய் – 2 தேக்கரண்டி

கிராம்பு - 3

பட்டை - 1 இஞ்ச் அளவு

ஏலக்காய் -  1 ; நசுக்கியது 

பிரியாணி இலை - 1

அன்னாசி மொக்கு - 1

பூண்டு -  4 ; நீளவாக்கில் அரிந்தது

பெரிய வெங்காயம்  - 1 ; நீளவாக்கில் அரிந்தது

பச்சை மிளகாய் – 2 ; நீளவாக்கில் அரிந்தது

உப்பு - சுவைக்கேற்ப 


செய்முறை :

1.  அரிசியை நன்றாக கழுவி, தண்ணீரில் 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

2.  ஒரு குக்கரில் நெய் + எண்ணையை சுட வைக்கவும்.

3.  சூடானதும் கிராம்பு, பட்டை, பிரியாணி இலை, மொக்கு மற்றும் ஏலக்காயை சேர்க்கவும்.

4.  சில நொடிகள் வறுத்துவிட்டு அரிந்த பூண்டு, வெங்கயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்க்கவும்.

5.  வெங்காயம் பொன் நிறமாக மாறும் வரை வறுக்கவும்.

6.  பட்டாணியை சேர்த்து சில நிமிடம் வதக்கி விட்டு, தணலை குறைத்து கொள்ளவும்.

7.  அரிசியிலிருந்து நீரை நன்கு வடித்துவிட்டு தாளித்த பொருள்களுடன் வறுக்கவும். அரிசி நன்கு காய்ந்து, பளபளப்பாக மாறும் வரை வறுக்கவும்.

8.  இப்போது நீரையும் தேங்காய் பாலையும் ஒன்றாக கலந்து குக்கரில் ஊற்றி நன்கு கலக்கவும். இரண்டையும் சேர்த்து தான் ஊற்ற வேண்டும். தேங்காய் பாலை அப்படியே கெட்டியாக ஊற்றினால், திரிந்து போகும் வாய்ப்பு அதிகம்.

9. இந்த கலவை கொதிநிலையை அடைந்தவுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து, மூடியால் மூடி விட்டு சமைக்கவும்.

10. 3 விசில்கள் வரவிட்டு, அடுப்பின் தீயை குறைத்து மீண்டும் 1 விசில் வரும்வரை (அ) அதிகபட்சம் 5 நிமிடங்கள் சமைக்கவும்.

9.  5 நிமிடங்கள் கழித்து நெய்யில் வதக்கிய முந்திரி பருப்பு மற்றும் திராட்சை தூவி அலங்கரித்து (விருப்பப்பட்டால்) பரிமாறவும்.


6 comments:

  1. பகிர்வுக்கு நன்றி தோழி..

    ReplyDelete
  2. படத்துக்காகவே செய்யலாம்...

    ReplyDelete
  3. சென்ற வார இறுதியில் எங்கள் வீட்டில் பட்டாணி புலவு செய்து பார்த்தோம். இந்த பட்டாணி புலவு நல்ல சுவையுடனும்,மணத்துடனும் மிகவும் நன்றாக இருந்தது. எனக்கு மிகவும் பிடித்த இந்த உணவு வீட்டிலேயே தயாரிக்கும்பொழுது மகிழ்ச்சியாக இருந்தது. எனது வேண்டுகோளுக்கிணங்கி பட்டாணி புலவு செய்முறையை பதிப்பித்தமைக்கு மிகவும் நன்றி, யாழினி!

    ReplyDelete
  4. @ கருன்,
    இது போன்ற பதிவின் மூலம் உங்கள் பசியாற்றுவதில் உதவி செய்வது, மகிழ்ச்சியாக உள்ளது. பாராட்டிற்கு நன்றி !

    ReplyDelete
  5. @ ஆமினா சகோ :)

    நாவில் எச்சில் ஊறச்செய்யும் படங்கள் உங்களை செய்து பார்க்க தூண்டினால் அதுவே யாழ் இனிதின் பெரும் வெற்றி ! நன்றி.

    ReplyDelete
  6. @ ராஜசேகர் மணி,

    உங்கள் விருப்பங்களை எங்கள் மீது நம்பிக்கை வைத்து பகிர்ந்தீர்கள்,அதற்கேற்ப வீட்டில் செய்து பார்த்தும் உள்ளீர்கள். மென்மேலும் இது போன்ற பதிவுகளை பகிர்ந்து கொள்ள பெரும் ஊக்கமாக உள்ளது உங்கள் ஆதரவு. மிக்க நன்றி.

    ReplyDelete

 

வாசித்தவர்கள்

இன்று ...

உங்கள் ஆதரவால் ...!

tamil blogs traffic ranking