Social Icons

.

Sunday, August 14, 2011

கருப்பு - வெள்ளை


கருப்பு - வெள்ளை

ஒரு நாள் நிறங்கள் எல்லாம் உரையாடி கொண்டிருக்கும் பொழுது, மற்ற நிறங்களை விட கருப்பிற்கும் வெள்ளைக்கும் பலத்த வாக்குவாதம் உண்டானது.

கருப்பு நிறம் "நான் எல்லா வண்ணங்களின் கலவையாக இருக்கிறேன், ஆனால் நீயோ ஒரு நிறத்தையும் சாராமல் நிற்கிறாய், ஆகையால் நான் தான் நிறங்களின் ராஜா " என்று மார்தட்டிக்கொண்டது.

வெள்ளை நிறமோ பதில் ஏதும் பேச இயலாமல் ஈன ஸ்வரத்தில் " நான் வெண்மையானவன். நல்ல மனதிற்கு என்னை தான் எடுத்துகாட்டாக சொல்வார்கள். ஆக நான் தானே வலியவன்" என்று வாதிட்டு பார்த்தது.

இந்த பஞ்சாயத்திற்கு முடிவு கிட்டாமல், எல்லா நிறங்களும் கடவுளிடம் சென்று மன்றாடின.

அமைதியே உருவான கடவுள் இன் முகத்துடன் இவ்வாறு கூறினார். "நிறங்களில் எதுவும் உயர்ந்தது , தாழ்ந்தது அல்ல, எல்லா நிறங்களுக்கும் அவரவர் சிறப்பு உண்டு". ஆனாலும் சமாதானம் ஆகாத கருப்பும் வெள்ளையும் சற்றே முகம் வாடின.

இவற்றின் முகங்களை நோக்கிய இறைவன், மீண்டும் சாந்தமாக " உண்மையில் பார்த்தால் கருப்பை விட வெள்ளையே சிறந்தது " என்று கூறினார். இதை கேட்ட கருப்பு நிறம் மிகவும் சினம் கொண்டு " கடவுளே இது என்ன பாரபட்சம் ? " என்று வாதிட்டது.

அதற்கு கடவுள் " கருப்பே கேள் ! உன்னை நோக்கி வரும் அத்தனை நிறங்களையும் நீ உனக்குள்ளேயே வைத்துக்கொள்வதால் நீ கருப்பாக இருக்கிறாய். ஆனால் வெள்ளையோ தன்னை நாடி வரும் அத்தனை நிறங்களையும் பிரதிபலிக்கிறது. பிறருக்கு ஈய தெரியாத உன்னை விட,  தன்னிடம் உள்ளதை மகிழ்ச்சியோடு திரும்ப கொடுக்கும் வெள்ளை தானே சிறந்த நிறம் " என்று கேட்டாரே ஒரு அசத்தல் கேள்வி. கருப்பு வாயடைத்து போனது. மற்ற நிறங்களும் ஆரவாரமாக இதை ஆமோதித்தன.

நீதி : தான் பெறும் கல்வி, செல்வம் ஆகியவற்றை பிறருக்கும் பகிர்ந்து கொடுப்பவனே சிறந்த மனிதன்.


4 comments:

  1. வணக்கம் சகோதரி,
    நிறங்களை அடிப்படையாக வைத்து, ஒரு தத்துவ விளக்கத்தினையும், பகிர்ந்து கொடுப்பதன் மகத்துவத்தினையும் அருமையாக விளக்கியிருக்கிறீங்க.
    நல்லதோர் பதிவு.

    ReplyDelete
  2. சொன்ன கருத்துக்கள் பாராட்ட தக்கவை

    ReplyDelete
  3. நிரூபன் சகோ, நல்ல தத்துவங்களை பகிர்ந்து கொள்ள நிறங்கள் மட்டும் அல்ல, நிஜங்களையும் அடிப்படையாக வைத்துக் கொள்வோம்.
    பாராட்டிற்கு நன்றி !

    ReplyDelete
  4. ஆமீனா, தொடர்ந்து எங்களை ஊக்குவிக்கும் உங்களுக்கு யாழ் இனிதின் நன்றி !

    ReplyDelete

 

வாசித்தவர்கள்

இன்று ...

உங்கள் ஆதரவால் ...!

tamil blogs traffic ranking