Social Icons

.

Sunday, August 7, 2011

ஆச அதிகம் வச்சி…….!



ஆச அதிகம் வச்சி ... ! 

ஓரு அமைதியான ஊரில் மக்கள் தமக்குள் நிறைவோடும், ஒற்றுமையோடும் வாழ்ந்து வந்தனர். ஊர் மக்களோடு விலங்குகளும் எவ்வித தொந்தரவும் இன்றி வாழ்ந்து வந்தன. குரங்குகள் மிக அதிமாக புழங்கும் அந்த ஊரை பற்றி கேள்விப்பட்ட ஒரு வியாபாரி தன் உதவியாளனோடு அங்கு வந்தான்.

சாதுரியமான அந்த வியாபாரி, அந்த ஊர் மக்களிடம் ஓர் அறிவிப்பு செய்தான்.

ஊர் பெருமக்களே ! உங்களுக்கோர் நற்செய்தி. நான் ஒரு விலங்குகள் வியாபாரி, பல்வேறு நாடுகளுக்கு விலங்குகளை எற்றுமதி செய்கிறேன், உங்கள் ஊரில் குரங்குகள் அதிகமாக உள்ளன என கேள்விப்பட்டு இங்கு வந்தேன். நீங்கள் எனக்கு பிடித்து தரும் ஒவ்வொரு குரங்கிற்கும் 25 ரூபாய் தருகிறேன். எனக்கு உதவி செய்ய முடியுமா ?? “

ஊரில் சும்மா திரிகின்ற குரங்குகளுக்கு 25 ரூபாய் ஒரு நல்ல தொகையாக தெரிந்ததால், ஊர் மக்கள் எல்லோரும் மிக மும்முரமாக வியாபாரிக்கு உதவினார்கள். நூற்றுக்கணக்கான குரங்குகள் பிடிபட்டன, மக்களும் நிறைய சம்பாதித்தார்கள்ஒரு கட்டத்தில் ஏறக்குறைய முக்கால்வாசி குரங்குகளும் பிடிபட்டுவிட்டன. இப்போது அந்த வியாபாரி கூறினான்மக்களே ! எனக்கு இன்னமும் குரங்குகள் தேவை, ஆதலால் இனி நீங்கள் பிடித்து வரும் ஒவ்வொரு குரங்கிற்கும் 50 ரூபாய் அளிக்கப்படும்.”

மென்மேலும் மக்கள் குரங்கு பிடிப்பதில் முனைப்பாக ஆனார்கள். ஊரின் அருகிலுள்ள காடுகளில் குரங்குகளை தேடி பிடிக்கலானார்கள். இம்முறை கிடைத்த குரங்குகளுக்கு அந்த வணிகன் 50 ரூபாய் அளித்தான். இவ்வாறு ஆயிரக்கணக்கில் குரங்குகள் சேர்ந்துவிட்டன.

இப்போது அந்த வியாபாரி ஊர்மக்களிடம்பெருமக்களே மிக்க நன்றி ! உங்கள் உதவியால் எனக்கு நிறைய குரங்குகள் கிடைத்துள்ளன, ஆனால் எனது தேவையோ இன்னும் அதிகம். நான் ஒரு அவசர வேலையாக என் ஊருக்கு செல்ல வேண்டியுள்ளது, என் உதவியாளனை இங்கு விட்டு செல்கிறேன். நான் திரும்பி வந்தவுடன் என் உதவியாளனிடம் நீங்கள் பிடித்து கொடுத்த ஒவ்வொரு புதிய குரங்கிற்கும் 200 ரூபாய் அளிக்கவும் தயாராக உள்ளேன், ஆகையால் உங்கள் வேட்டையை தொடருங்கள்என கூறி அவன் ஊருக்கு சென்றுவிட்டான்.

சுற்றுப்புறத்தின் எல்லா குரங்குகளையும் பிடித்துவிட்டதால், மேலும் குரங்குகள் எங்கு அகப்படும் என தேடி அலைந்தனர் மக்கள். அப்போது அந்த உதவியாளன் மக்களிடம்என் எஜமானன் ஊருக்கு செல்லும்போது குரங்குகளை எண்ணவில்லைமாறாக என்னிடம் அந்த பொறுப்பை கொடுத்துள்ளான். அவன் ஒரு கஞ்சன். ஓவ்வொரு குரங்கையும் 1000 ரூபாய்கு விற்பான் ஆனால் உங்களுக்கு வெறும் 200 ரூபாய் தான் தருவான். நான் ஒரு யோசனை சொல்கிறேன் கேளுங்கள்என கூறிஎன் பாதுகாப்பில் இப்போது 1000 கணக்கில் குரங்குகள் உள்ளன, அவற்றை 150 ரூபாய்க்கு என்னிடம் இருந்து வாங்கி கொண்டு , என் எஜமானன் வந்தவுடன் அவனிடம் விற்று 200 ரூபாய் வாங்கி கொள்ளுங்கள்.”என்று சொன்னான். மக்களும் அவன் யோசனையின் பேரில் அவனிடம் 150 ரூபாய் கொடுத்துவிட்டு குரங்குகளை வாங்கி சென்றனர். குரங்குகளை விற்று விட்டு உதவியாளனும் சத்தமின்றி இரவோடு இரவாக ஊரை விட்டு கிளம்பி சென்று விட்டான்.

ஊர் மக்கள் பேராசையோடு காத்திருந்தார்கள் ஆனால் கடைசி வரை அந்த வியாபாரி ஊருக்கு திரும்பவில்லை.     

மிச்சம் ஆனது ஊரில் திரிந்து கொண்டிருந்த குரங்குகளும், அவற்றின் பெயரால் குல்லா அணிவிக்கப்பட்ட அப்பாவி ஊர் மக்களும் தான்.

கதையின் நீதி : ஆசைக்கும் ஓர் அளவுண்டு ! ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவனும் இருப்பான். !




9 comments:

  1. நண்பர்கள் தின வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  2. என் மகனுக்கு சொல்ல அருமையான கதை

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. உங்களுக்கு என் உளம் நிறைந்த நண்பர்கள் தின வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
    பிந்திய வாழ்த்துக்களுக்கு மன்னிக்கவும்.

    ReplyDelete
  4. அவ்...அவ்....அருமையான ஓர் தத்துவக் கதையினை ஊர் மக்களைக் குரங்குகளுக்கு உவமித்துப் பகிர்ந்திருக்கிறீங்க.ரசித்தேன். இதனைப் பள்ளி மாணவர்களிடம் கொண்டு சென்று சேர்க்க வேண்டும். அவ்வளவு அருமையான பதிவு,.

    ReplyDelete
  5. கருன் சகோ, தங்களுக்கும் யாழ் இனிதின் சார்பாக பிந்திய நண்பர்கள் தின வாழ்த்துக்கள். நன்றி

    ReplyDelete
  6. ஆமினா, உங்கள் மகனுக்கு மட்டுமல்ல, நம் எல்லோர் வீட்டு மழலைகளுக்கும் சொல்ல ஒரு கதை என்று எண்ணி தான் பகிர்ந்தோம். பாராட்டிற்கு நன்றி.

    ReplyDelete
  7. நிரூபன், உள்ளம் கனிந்த பிந்திய நண்பர்கள் தின வாழ்த்துக்கள். தாங்கள் கூறியது போல, பள்ளி மாணவர்கள் அறிந்து கொள்ள இன்னும் பல கதைகள் பகிர எண்ணம். தொடர்ந்து ஆதரியுங்கள். நன்றி.

    ReplyDelete
  8. Nice and funny story. Peraasai peru nastam enbadhai nallave eduthu solli irukeenge. Thanx, Siva

    ReplyDelete
  9. சிவா, உங்கள் கருத்து உண்மை தான். நன்றி !

    ReplyDelete

 

வாசித்தவர்கள்

இன்று ...

உங்கள் ஆதரவால் ...!

tamil blogs traffic ranking