Social Icons

.

Friday, May 27, 2011

ஹை ஹீல் காலணி அணிபவரா நீங்கள் ?




ஹை ஹீல் காலணி அணிபவரா நீங்கள் ?

ஹை ஹீல் செருப்புகள் ( சுருக்கமாக ஹீல்ஸ் ), அணிபவரின் பின்னங்காலை குதிகாலை காட்டிலும் மேலேற்றி வைக்கும் ஒரு வகை காலணியாகும். இது அணிபவருக்கு மென்மையும், அழகும், கூட்டி வடிவான கால்கள் உள்ளது போல் ஒரு மாய தோற்றத்தை உண்டாக்கும்.

ஹை ஹீல் காலணிகள் பல வித வகைகளில்,பல பாங்குடன் காணப்படுகின்றன. இதன் ஹீல்கள் பலவித வடிவங்களில் உள்ளன. அவற்றில் ஸ்டிலெட்டொ, பும்ப் (கோர்ட் ஷூ), ப்ளோக், கூம்பு வடிவம், ப்லேடு, மற்றும் ஆப்பு வடிவம் புகழ்பெற்றவை.






ஜிம்மி சூ மற்றும் குச்சீ போன்ற நவ நாகரீக காலணி இணையத்தளங்களில் குறைந்த ஹீல் (லோ ஹீல்) 2.5 இஞ்ச் ( 6 சென்ட்டிமிட்டர்) அளவில், சராசரி ஹீல் (மீடியம் ஹீல் ) 2.5 லிருந்து 3.5 இஞ்ச் (8.5 சென்ட்டிமிட்டர்) அளவில், மற்றும் மேற்கூறிய அளவுக்கு அதிகமாக உள்ளவை உயர்ந்த ஹீல் (ஹை ஹீல்) அளவிலும் வகைபடுத்தப்பட்டுள்ளன.

பெரும்பாலும், ஹை ஹீல் செருப்புகள் பெண்களால் அணியப்படுகிறது என்றாலும், கௌபாய் பூட், க்யுபன் ஹீல்ஸ் போன்ற ஷூ வடிவங்கள் இரு பாலர்களாலும் அணியப்படுகின. முற்காலத்தில், ஆண்களும் ஹை ஹீல் காலணிகள் அணியும் வழக்கம் வைத்திருந்தார்கள்.






ஹை ஹீல் காலணிகள் உங்கள் கவர்ச்சியை கூட்டினாலும், தோற்றப்பொலிவை பாதுகாக்க அதன் சரியான பயன்பாட்டை அறிந்துகொள்வது மிகவும் அவசியமாகும்.

அதிகமாக குனியாதீர்கள் :

கால் முட்டிகளில் ஹை ஹீல்ஸ் அதிக அழுத்தம் கொடுப்பதால், இதை அணிந்து நடக்கும் பொழுது கவனமாக இருத்தல் அவசியம்.முட்டிகளில் மீது எற்படும் அதீத அழுதத்தால் மூட்டுவாதம் வரகூடிய வாய்ப்புகள் உள்ளன.

சரியான கோணத்தில் அணியவும் :

ஹை ஹீல் செருப்பால் ஆடுதசை விரிந்து சுருங்குவதால்,சரியான கோணத்தில் அணிய தவறினால் கால் வலி உண்டாகும் வாய்ப்பு உள்ளது.

குதிகால் வலி :

ஹை ஹீல் அணிகையில் உங்கள் குதிகால் பின்னங்காலை காட்டிலும் கீழ் நோக்கி இருப்பதால், குதிகாலில் இறுக்கம் எற்பட்டு, மிகுந்த வலியை தரலாம்.


செருப்பு வார்கள் :

ஹை ஹீல் செருப்புகளின் வார்கள் அணிந்து நடக்கும்போது, சற்று கவனம் தேவை.அசௌகரியமான வார்களால் "ஹாக்லண்டு" குறைபாடு என்ற வீக்கம் எற்படலாம்.

கணுக்கால் காயம் :

ஹை ஹீல் அணிந்து கொண்டு நடக்கையில் அதிக கவனமாக் இருக்க வேண்டியது தடுமாறாமல் இருப்பது தான். ஏனெனில், தடுமாற்றத்தினால் கணுக்கால் முறிவு எற்படும் வாய்ப்பு உள்ளது.

மூட்டுவலி :

உயர்ந்த ஹீல் அணியும் பொழுது நம் உடலின் எடை இயற்கைக்கு மாறாக உடல் முழுதும் பகிரப்படுகிறது. இதனால் மூட்டு வலி உண்டாகும் வாய்ப்ப்பு உள்ளது.


ஹீல்களின் உயரம் :

ஹை ஹீல் அணிவதால் நம் கால்களில் செயற்கை மாறுதல்கள் எற்படுகின்றது. இதனால் நம் முன்னங்காலில் அழுத்தம் உண்டாகிறது.

வெவ்வேறு இஞ்ச் அளவால் முன்னங்காலில் எற்படும் அழுததம் :

3 இஞ்ச் ஹீல் + 76%
2 இஞ்ச் ஹீல் + 57%
1 இஞ்ச் ஹீல் + 22%

தகவல் உபயம் : அமெரிக்க எலும்பியல் நிபுணர்கள் குழு.

தவறான நிலை :

ஹை ஹீல்ஸ் நடு உடம்பின் எடையை முன்னுக்கு தள்ளுகிறது, ஆகையால், இடுப்பு மற்றும் முதுகெலும்பின் சமன்பாட்டை அது சீர்குலைக்கிறது.





குதிகால்களில் கவனம் :

ஹை ஹீல்ஸ் குதிகாலின் "லும்பார்" முள்ளெலும்பில் அழுத்தம் எற்படுத்தி, உங்கள் கீழ் முதுகில் தீவிரமான வலியை உண்டாகுகிறது.

"புனியன்" என்னும் குறைப்பாடு :

சரியாக பொருந்தாத காலணி, உங்கள் குதிகாலில் "புனியன்" எனப்படும் ஒரு வகை வீக்கத்தை எற்படுத்துகிறது.




நரம்பு சேதம் :

உள்ளங்கால்களில் எற்படும் நரம்பு சேதம் , வலியையோ உணர்ச்சியற்ற் நிலையை உண்டாக்க வல்லது. ஹை ஹீல் அணிவது இவ்வாறு நடக்க ஒரு பெரும் காரணமாக கூறப்படுகிறது.











2 comments:

  1. ஹை ஹீல் அணிவதால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றி நன்றாக விளக்கமாக சொல்லியிருந்தீர்கள். பொதுவாக இந்த வகை காலணிகளை உயரம் குறைவாக உள்ள பெண்கள் அணிவார்கள். ஆனால், நல்ல உயரம் உள்ள பெண்கள் கூட இதை அணிவது ஏன் என்று தான் புரியவில்லை. அதை பற்றி சற்று விளக்கமாக கூறியிருக்கலாம்.

    ReplyDelete
  2. இக்கட்டுரையின் தொடக்க வரிகள் இவை ....

    // ஹை ஹீல் செருப்புகள் ( சுருக்கமாக ஹீல்ஸ் ), அணிபவரின் பின்னங்காலை குதிகாலை காட்டிலும் மேலேற்றி வைக்கும் ஒரு வகை காலணியாகும். இது அணிபவருக்கு மென்மையும், அழகும், கூட்டி வடிவான கால்கள் உள்ளது போல் ஒரு மாய தோற்றத்தை உண்டாக்கும். //

    ஆகவே ராஜசேகர், குள்ளமான பெண்கள் மட்டும் அல்லாது உயரமான பெண்கள் கூட அழகான மாய தோற்றத்திற்காக ஹை ஹீல் மோகம் கொண்டுள்ளர்கள் என்பதே உண்மை.

    மேற்கொண்டு இதை பற்றிய தகவல்களை பகிர முயற்சி செய்கிறோம். நன்றி.

    ReplyDelete

 

வாசித்தவர்கள்

இன்று ...

உங்கள் ஆதரவால் ...!

tamil blogs traffic ranking