Social Icons

.

Saturday, May 28, 2011

வடைகறி


வடைகறி

செட்டிநாட்டு சமையல் முறைகளில் வடைகறி மிகவும் ருசியான , மொறுமொறுப்பான காலை உணவுடன் உண்ணும் பதார்த்தமாகும். இடியாப்பம், ஆப்பம் மற்றும் இட்லியுடன் மிகவும் பொருந்தும். இதை தோசை,பூரி மற்றும் சப்பாத்தியுடனும் உண்ணலாம்.





தேவையான பொருள்கள்- ()

கடலை பருப்பு  - அரை கிண்ணம்
கிராம்பு - ஒரு துண்டு
பட்டை - 2 விள்ளல்
சீரகம் - 2 சிட்டிகை
பெருஞ்சீரகம்சிட்டிகை
பச்சை மிளகாய் - ஒன்று
நறுக்கபட்ட வெங்காயம் - 3 தேக்கரண்டி
நறுக்கபட்ட இஞ்சி - கால் தேக்கரண்டி
நறுக்கபட்ட பூண்டு    - கால் தேக்கரண்டி
உப்பு    - 3 சிட்டிகை
பொடியாக நறுக்கபட்ட கறிவேப்பிலை - ஒரு தேக்கரண்டி

தேவையான பொருள்கள்-()

மெலிதாக நறுக்கபட்ட வெங்காயம்  - ஒன்று
சாறு நிறைந்த, பழுத்த தக்காளி - இரண்டு
இஞ்சி பூண்டு விழுது  - 2 தேக்கரணடி
பச்சை மிளகாய் - இரண்டு
ப்ரிஞ்சி இலை () பேயிலை     - ஒன்று
பட்டை  - ஒன்று
கிரம்பு  - இரண்டு
சீரகம்   - கால் தேக்கரண்டி
பெருஞ்சீரகம் - கால் தேக்கரண்டி
கடுகு - 1 சிட்டிகை
மஞ்சள் பொடி - 3 சிட்டிகை
மிளகாய் பொடி  - 1 தேக்கரண்டி
மல்லி பொடி - 2 தேக்கரண்டி
உப்பு - கால் தேக்கரண்டி () தேவைகேற்ப்ப
கறிவேப்பிலை - 5 இலைகள்
கொத்தமல்லி  - கை அளவு
எண்ணை  - 5 தேக்கரண்டி

செய்முறை

() பொருள்களை கொண்டு வடை செய்வதற்கு

1)  கடலை பருப்பை கழுவி குறைந்தது 2 மணி நேரம் நீரில் ஊற வைக்கவும், பிறகு நீரை முழுதும் வடித்து விட்டு ஒரு சுத்தமான துண்டில் ஈரப்பதம் நீங்குவதற்க்கு உலர வைக்கவும்.

2)  செய்பொருள் () வில் குறிப்பிடபட்டுள்ள கடலை பருப்பு, லவங்க பட்டை, கிராம்பு, சீரகம், பெருஞ்சீரகம் மற்றும் பச்சை மிளகாய் இவற்றை மணல் பதத்தில் அறைத்துகொள்ளவும்.

3)  அறைக்கபட்ட விழுதில் பொடியாக நறுக்கபட்ட வெங்காயம்,இஞ்சி,பூண்டு மற்றும் கறிவெப்பிலையை சேர்த்து உப்பையும் தூவவும்.

4)  அறைக்கபட்ட விழுதை சிறிய விண்டுகள் ஆக்கி இட்லி பாத்திரத்தில் 8-10 நிமிடங்களுக்கு வேகவைக்கவும்.





() பொருள்களை கொண்டு கறி செய்யும் முறை

1)  வாணலியில் எண்ணை ஊற்றி அதில் கடுகை தூவிவிட்டு சீரகம், பெருஞ்சீரகம்,பேயிலை, கிராம்பு மற்றும் லவங்க பட்டையை சேர்க்கவும்.

2)  வெங்காயம், பச்சை மிளகாயை பொன் நிறமாக வறுத்து விட்டு, அதில் இஞ்சி பூண்டு விழுதை கலந்து , பிறகு தக்காளியை சேர்க்கவும்.

3)  இவை சிறிது நேரம் வதங்கிய பிறகு ,அதில் மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, மல்லி பொடியை உப்புடன் சேர்த்து விடவும்.

4)  குழம்பு கெட்டியாக கொதித்த பிறகு அதில் வேகவைத்த வடையை சிறிது பொடித்து விட்டு போடவும்.

5)  வடை குழம்பில் ஊறி அதன் சாற்றை உறிஞ்சும் வரை மெல்லிய ஜ்வாலையில் கொதிக்க விடவும்.

6)  கறிவெப்பிலை மற்றும் கொத்தமல்லியை மேலே தூவி விட்டு சூடாக பரிமாறவும்.





3 comments:

  1. iniku amma seirangalaa paarpom yepdi varuthunnu?

    ReplyDelete
  2. %%வாழ்த்துகள் யாழினி...அருமையான வலைபூ...%%

    **இதுவரை வடையை பொறித்து வடை கறி செய்வார் என் அம்மா. நேற்றுதான் வடை செய்யும் போது அதை வேக வைக்கவேண்டும் என்பது தெரிந்தது.நன்றி. இன்று செய்தும் பார்த்தாச்சு...சூப்பர் சுவை.அப்படியே ஸ்ரீனிவாசா ஸ்வீட்ஸ் வடைகறியின் சுவை.**

    ~~செய்முறையில் சின்ன மாற்றம். வெங்காயம் மற்றும் தக்காளியில் பாதி அளவை அரைத்து போட்டார்கள்.~~

    ++விரைவில் சென்னா மசாலா செய்வது எப்டியும் போடுங்கள்.++

    &&ஒரு பிழை...
    தேவையான பொருள்கள்- (அ)
    பெருஞ்சீரகம் - ஒரு துண்டு- இது தவறு.&&

    ReplyDelete
  3. %% கார்திஸ், வருகைக்கு நன்றி %%

    ** தளம் தொடங்கிய பின், முதன்முதலில் நாங்கள் கூறியுள்ள செய்முறையை செய்து பார்த்து கருத்தை பகிர்ந்தது தாங்கள்தான் தான். அதற்கு நன்றி **

    ~~ வெங்காயம் மற்றும் தக்காளியை பாதி அளவு மட்டும் அரைத்து சேர்க்கும் உத்தியும் நன்றாக உள்ளதே. ஹும்ம்...நல்ல அறிவுரைக்கு நன்றி ~~

    ++ சன்னா மசாலாவும் விரைவில் எதிர்பார்க்கலாம் ++

    && தவறை சுட்டி காட்டியதற்கு நன்றி, திருத்தம் செய்தாகிவிட்டது &&

    ReplyDelete

 

வாசித்தவர்கள்

இன்று ...

உங்கள் ஆதரவால் ...!

tamil blogs traffic ranking