Social Icons

.

Saturday, May 28, 2011

முட்டை மசாலா



முட்டை மசாலா

சாதம் மற்றும் தோசையுடன் அருந்த விரைவில் செய்யக்கூடிய எளிமையான ஒரு துணை கறியாக விளங்குவது முட்டை மசாலா.





செய்பொருள்கள் :

முட்டைகள் -  4
பெரிய வெங்காயம் -   2
தக்காளி -   4 () 5
இஞ்சி பூண்டு பசை -   1 தேக்கரண்டி
சமையல் எண்ணெய்  -   4 தேக்கரண்டி
கடுகு -   கால் தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு -   கால் தேக்கரண்டி
மஞ்சள் பொடி -   கால் தேக்கரண்டி
மிளகாய் பொடி  -   1 தேக்கரண்டி
மல்லி பொடி  -   1 தேக்கரண்டி
உப்பு -   சுவைக்கேற்ப்ப
கறிவேப்பிலை -   2 கொப்புகள்
கொத்தமல்லி -    உணவை அலங்கரிக்க

செய்முறை :

1.  முட்டையை வேகவைத்து , அதன் ஒடுகளை உறித்து, அதன் வெள்ளை பகுதியில் 4 பக்கமும் முட்கரண்டியால் () கத்தியால் ஒட்டை இட்டு கொள்ளவும்.இப்படி செய்தால் மசாலாவின் சாறு முட்டைக்குள் இறங்கி, முட்டையின் உள்ளேயும் அதன் சாறு கலந்து சுவை கூட்டும்.

2.  ஒரு வாணலியில் எண்ணெய்யை சுட வைத்து கொள்ளுஙள்.

3.  கடுகு, உளுத்தம்பருப்பு மற்றும் கறிவேப்பிலயை வாணலியில் சேர்க்கவும்.

4.  கடுகு வெடித்தவுடன், அதனுடன் நறுக்கிய வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு பசையை சேர்க்கவும்.

5.  இந்த கலவை பொன் நிறமாக மாறிய பின், நறுக்கிய தக்காளியை சேர்க்கவும்.

6.  சில நிமிடங்கள் வறுத்த பின்பு, அதனுடன், மஞ்சள் பொடி, மிளகாய் பொடி மற்றும் மல்லி பொடியை சேர்க்கவும்.

7.  பிறகு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். பாத்திரத்தை மூடிவிட்டு 10 நிமிடங்கள் மெல்லிய ஜ்வாலயில் சமைக்கவும்.

8.  இப்பொழுது எண்ணெய் மேலே மிதக்க, ஒரு குழம்பு வடிவத்தை காணலாம்

9.  முட்டைகளை இப்பொது குழம்பில் போட்டு, முட்டைகள் நன்கு ஊறும்படி குழம்புடன் சேர்த்து, சிறிது நேரம் மூடி வைக்கவும்.

10. மீண்டும் ஒரு 5 நிமிடங்கள் மெல்லிய ஜ்வாலயில் சமைக்கவும்.

11. கொத்தமல்லியை அலங்காரமாக மேலே தூவி விட்டு சூடாக பரிமாறவும்.

1 comment:

 

வாசித்தவர்கள்

இன்று ...

உங்கள் ஆதரவால் ...!

tamil blogs traffic ranking