Social Icons

.

Thursday, September 29, 2011

ஒன்பது இரவுகள் - ஒப்பிலா தகவல்கள்



ஒன்பது இரவுகள்ஒப்பிலா தகவல்கள்

நவராத்திரி என்றால் என்ன ?

விஞ்ஞான தத்துவங்கள் கோலோச்சும் தற்காலத்திற்கு வெகு முன்னமே இந்திய பண்டிகைகள் நிலைநிறுத்திய மெய்ஞ்ஞானம் அற்புதாமானவை.
அப்படிப்பட்ட ஒரு பண்டிகையான நவராத்திரியை பற்றி தெரிந்து கொள்வோமா தோழர்களே !

சக்தி என்பது அழிவில்லாத ஒன்றாகும், அதை உருவாக்கவோ, அழிக்கவோ இயலாது, எப்போதும் அது நிலைத்து இருக்கும் என்ற விஞ்ஞான தத்துவம் நவராத்திரி எனப்படும் சக்தி வழிபாடு மூலம் நிலைநிறுத்தப்படுவதே இப்பண்டிகையின் பின்புலமாகும். "துர்க்கை" என்றால் தீய சக்தியிலிருந்து நம்மை காப்பவள் என்று பொருள். நம்மில் ஒளிந்திருக்கும் நற்சக்தியை தூண்டி எழுப்பும் முயற்சி தான் நவராத்திரி தத்துவம்.



ஏன் சக்தி வழிபாடு ?

கடவுளை இறைவன் என்று ஆண்பால் கொண்டு அழைக்கும்போது, ஏன் அம்மனை கொண்டாடுகிறோம் என நாம் ஐயம் கொள்ளலாம். காத்தல், பேணுதல்,  நல்வழி படுத்துதல் என இறைவனின் பல செயல்கள் தாய்மையை தான் சித்தரிக்கின்றன. குழந்தை தன் தாயில் இந்த குணங்களை காண்பதால் இறைவனின் இந்த தாயம்சத்தை போற்றவே நவராத்திரி விழா சக்தி வழிபாடாக விளங்குகிறது.



ஏன் வருடத்திற்கு இரண்டு முறை நவராத்திரி கொண்டாடப்படுகிறது ?

இந்திய நாட்டை பொருத்தவரை கோடையின் தொடக்கமும், குளிர்வாடையின் தொடக்கமும் சீதோஷணம் மற்றும் சூரியனின் ஆதிக்க சக்தியையும் நிர்ணயிக்கிறது. ஆகையால் இந்த இரு காலத்திலும் நவராத்திரி கொண்டாடப்படுகிறது, மேலும் வேறு இரண்டு விளக்கமும் உண்டு

) பருவ மாற்றத்தின் போது நம் பூமி சூரியனின் மூலம் அதற்குண்டான ஒளியும் வெப்பமும் பெறுகிறது, இதை நன்றியோடு நினைக்கும் வண்ணம்.

இந்த பருவ மாற்றத்தால், நம் உடலில் மற்றும் மனதில் ஏற்படும் வேதியியல் மாற்றங்களை சரி விகிதமாக காக்க வேண்டியும் அம்பாளை வணங்குகிறோம்.



ஒன்பது இரவுகள் என்ன கணக்கு ?

மூன்று பிரிவாக நவராத்திரி விழா பிரிக்கப்படுகிறது.

முதல் மூன்று நாட்கள் நல்வாழ்வின் தேவைகளான கல்வி, செல்வம்,வீரம் ஆகியவற்றில் துன்பத்தை எதிர்கொள்ளும் சக்தியை வேண்டி துர்க்கை அம்மனை வணங்கும் நாட்களாகும்.

அடுத்த மூன்று தினங்கள் நம் தேவைகள் அனைத்திற்கும் உதவும் செல்வம் வழங்கும் திருமகள் ஆகிய லக்ஷ்மி தேவியை வணங்கி அவள் ஆசி பெறும் நாட்களாகும்.

கடைசி மூன்று நாட்கள் நாம் பெற்ற வீரம் மற்றும் செல்வத்தை நல்முறையில் செலுத்த உதவும் கல்வியை அருளும் கலைமகள் எனும் சரஸ்வதியை போற்றி கொண்டாடும் தினங்களாகும்.

ஆக வாழ்வியல் தத்துவங்களை நம் பெரியோர்கள் நவராத்திரி போன்ற விழாக்கள் மூலம் நமக்கு அளித்திருக்கிறார்கள் என்பது ஐயம் இல்லாத ஒன்றாகும்.



நாம் அறிந்திராத சில நவராத்திரி தகவல்கள் ;

1)  ஷரத் நவராத்திரி, வசந்த் நவராத்திரி மற்றும் ஆஷாட் நவராத்திரி என நவராத்திரி மூன்றாக பிரிக்கப்படுகிறது.

2)  செப்டம்பர் - அக்டோபர் மாதம் கொண்டாடப்படும் ஷரத் நவராத்திரி முதன்மையானதாகும்.

3)  துர்க்கையால் வதம் செய்யப்பட்ட மஹிஷாசுரன் வதத்தை ஒட்டி ஷரத் நவராத்திரி கொண்டாடப்படுகிறது.



4)  மார்ச்-ஏப்ரல் மாதத்தில் வரும் வசந்த காலத்தில் கொண்டாடப்படுவதால் அதை வசந்த் நவராத்திரி அன்று அழைக்கிறோம். இது பெரும்பாலும் வட இந்தியாவில் கொண்டாடப்படும் விழாவாகும்.

5)  ஹிமாச்சல் பிரதேசத்தில் "ஆஷாட்"என்று அழைக்கப்படும் மழை பருவத்தின் தொடக்கத்தில் கொண்டாடப்படுவது ஆஷாட் னவராத்திரி ஆகும். ஜூலை - ஆகஸ்ட் மாதம் இந்த கொண்டாட்டம் பின்பற்றப்படுகிறது.

6)  சக்தியின் ஒன்பது வடிவமானது துர்கா, பத்ரகாளி, ஜகதம்பா,   அன்னபூர்ணா, சர்வமங்களா, பைரவி, சண்டிகா, லலிதா, பவானி மற்றும் மூகாம்பிகா என்று போற்றப்படுகிறது.







7)  நவராத்திரி விழாவின் தேதிகள் நிலவு பஞ்ஞாங்கத்தின் அடிப்படையில் குறிக்கப்படுகின்றதுஅஷ்வின் மாதத்தில் பிறை தோன்றும் முதல் நாளான "பிரதிபாத" நாளில் இவ்விழா தொடங்குகிறது.

8)  ஒன்பது  நாளின் முடிவில் வரும் பத்தாம் நாளை "விஜயதசமி" அல்லது "தஷரா" என்று கொண்டாடி நவராத்திரி விழா செவ்வனே நிறைவு பெறுகிறது.





6 comments:

  1. நவராத்திரி வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. நவராத்திரி நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. நவராத்திரி பற்றி விரிவான பார்வை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. எமது பதிவுக்கு வருகை தந்தற்கு மிக்க நன்றி யாழினி . .
    உங்க பதிவுக்கு இன்றுதான் முதல் முறையாக வருகிறேன் .
    வாவ் சூப்பரா இருக்கு . . நவராத்திரி பற்றிய தகவல்களை சிறப்பாக பதிவிட்டு இருக்குரிகள் . . மற்ற பதிவுகளையும் தொடர்ந்து படிக்கிறேன் .
    நன்றி யாழினி

    ReplyDelete
  5. நைஸ் தகவல் ........... யாழ் .. எனக்கு இன்னைக்கு தான் தெரியும் நவராத்திரி பத்தி . நல்லா இருக்கு ,... .. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. தோழர்கள் கோகுல், மாய உலகம், சகோதரர் கே எஸ் எஸ் ராஜ் மற்றும் புதிதாக வருகை தந்து இருக்கும் ராக்ஸ் ராஜேஷ், கோட்டை சாமி ஆகிய அனைவருக்கும், யாழ் இனிதின் உள்ளம் கனிந்த நவராத்திரி நல்வாழ்த்துக்கள்.

    உலகை காக்கும் அன்னை உங்கள் எல்லா நியாயமான எண்ணங்களையும் நிறைவேற்றி வைக்க வேண்டும் என பிரார்த்திக்கிறோம்.

    இங்கு வந்து அனைவரையும் வாழ்த்தியமைக்கு நன்றிகள் !

    ReplyDelete

 

வாசித்தவர்கள்

இன்று ...

உங்கள் ஆதரவால் ...!

tamil blogs traffic ranking