Social Icons

.

Saturday, September 3, 2011

ஒரு வார்த்தை .... ஒரு வாழ்க்கை !




ஒரு வார்த்தை .... ஒரு வாழ்க்கை !

ஒற்றை பாடல் வரி......
நம் இதய தந்திகளை மீட்டிவிடலாம்.
மலரின் இதழில் வழியும் ஒற்றை தேன் துளி....
வண்டிற்கு அமுது ஊட்டிவிடலாம்.



நெடுந்தூரம் நம்மை அழைத்துச்செல்லும்......
பயணம் ஒரு அடியில் துவங்கலாம்.
ஒரே ஒரு விடிவெள்ளியின் வெளிச்சத்தில்.....
கடலில் தத்தளிக்கும் மாலுமிக்கு வழி துலங்கலாம்.

சிறிய ஒரு புன்னகையால்......
இதயங்களின் காழ்ப்பு மறையலாம்.
சற்றே யோசித்து சிந்திய .....
ஒரு சிந்தனை ஒரு லட்சியத்தை வரையலாம்.



என்றோ, எவனோ ஒவ்வொன்றாய் விதைத்த.....
விதைகள் நமக்கின்று காடாகலாம்.
சிந்தித்து நாம் அளிக்கும் ஒவ்வொரு....
வாக்கினாலும் பாரதம் வீறுநடை போடும் ஓர் நாடாகலாம்.

பெண்ணின் ஒரு கண்ணீர் துளி......
ஆணின் ஆயிரம் வார்த்தைகளை காட்டிலும் பொருள் பெறலாம்.
ஆணின் ஒற்றை நம்பிக்கை வார்த்தை......
அச்சமுற்ற பெண்ணின் விழிநீர் துடைக்கும் அருள் பெறலாம்.



குழந்தை பேசும் ஒரு முதல் வார்த்தை......
அன்னைக்கு கோடி சுகம் தான்.
கடவுள் கொடுத்த ஒரு வாழ்க்கை......
அனைவருக்கும் சமம் தான்.

கிடைத்த இந்த ஒரு பிறவியில்.....
பரப்புவோம் அன்பினை.
வயது போதாமல் மாண்டு விட்டால்.....
நம் பிணம் புதையட்டும் மண்ணுக்குள்ளே
அன்பு கொண்ட நம் குணம் மட்டும்
வாழட்டும் புதையாமல் !
என்றைக்கும் சிதையாமல் !


14 comments:

  1. தலைப்பும் , கவிதையும் அருமை..

    ReplyDelete
  2. வாங்க கருன், ரொம்ப நாள் கழித்து வந்து இருக்கீங்க ....

    உங்கள் கருத்திற்கும் ஊக்கத்திற்கும் நன்றி !

    ReplyDelete
  3. ///கிடைத்த இந்த ஒரு பிறவியில்.....
    பரப்புவோம் அன்பினை.
    வயது போதாமல் மாண்டு விட்டால்.....
    நம் பிணம் புதையட்டும் மண்ணுக்குள்ளே
    அன்பு கொண்ட நம் குணம் மட்டும்
    வாழட்டும் புதையாமல் !
    என்றைக்கும் சிதையாமல் //

    அழகான வரிகள் சகோதரி

    ReplyDelete
  4. அன்பினை பரப்புவோம்.... அன்பே ஜெயம்.... அன்பை ஒன்றே பரிமாறுவோம்... பகிர்வுக்கு நன்றியுடன் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. பெண்ணின் ஒரு கண்ணீர் துளி......
    ஆணின் ஆயிரம் வார்த்தைகளை காட்டிலும் பொருள் பெறலாம்.
    ஆணின் ஒற்றை நம்பிக்கை வார்த்தை......
    அச்சமுற்ற பெண்ணின் விழிநீர் துடைக்கும் அருள் பெறலாம்.... nice lines !!!! i liked it

    ReplyDelete
  6. K.s.s. Rajh, உங்கள் ஊக்கத்திற்கு நன்றி சகோதரா !

    ReplyDelete
  7. மாயா உலகம், உங்கள் வருகைக்கும், அன்பிற்கும், வாழ்த்திற்கும் நன்றிகள் பல .....

    ReplyDelete
  8. கிரண், நன்றி :)

    ReplyDelete
  9. குழந்தை பேசும் ஒரு முதல் வார்த்தை......
    அன்னைக்கு கோடி சுகம் தான்.
    கடவுள் கொடுத்த ஒரு வாழ்க்கை......
    அனைவருக்கும் சமம் தான்.

    அழகான வரிகள் சகோ.. அருமையான கவிதை வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  10. இது உங்க ஏரியா ........ அதுல நாங்க வரணும் ............ கவிதையா ..

    ReplyDelete
  11. hai yazini.... anbirku ethuvum nigarillai anbai un kavithaikkum aptiye

    ReplyDelete
  12. இசையன்பன் சகோ !

    தங்கள் வருகைக்கு யாழினிதின் நன்றி !

    உங்கள் மேலான பின்னூட்டம் எங்களுக்கு ஒரு சிறந்த ஊக்க மருந்து .

    தொடர்ந்து வருக , ஆதரவு தருக.

    ReplyDelete
  13. ஹோம் பேஸ்டு ஜாப் !

    யாழ் இனிது உங்களை அன்புடன் வரவேற்கிறது.

    இது எங்கள் ஏரியா அல்ல, நற்கருத்தை பகிர்ந்து கொள்ளும் எல்லோருக்கும் சொந்தமான ஏரியா. நீங்கள் விரும்பினால் உங்கள் பங்களிப்பை தரலாம் , அதை பரிசீலித்து வெளியிடுகிறோம்.

    நன்றி.

    ReplyDelete
  14. விஜித்ரன், உங்கள் வரவு நல்வரவாகுக !

    அன்பிற்குண்டோ அடைக்கும் தாழ் என்ற குறள் வழியில் தான் இங்கு எல்லா பதிப்புகளும் வெளியிடுகிறோம்.

    உங்கள் ஆதரவால் மேலும் இப்பணி தொடரும்.நன்றி.

    ReplyDelete

 

வாசித்தவர்கள்

இன்று ...

உங்கள் ஆதரவால் ...!

tamil blogs traffic ranking