மட்டன் குருமா
மட்டன் குழம்பு வகைகளில், மட்டன் குருமா என்பது அனைவராலும் விரும்பி உண்ணப்படும் ஒரு உணவு வகை ஆகும். மட்டன் குருமாவின் சிறப்பு என்னவென்றால், அரிசி சாதம், ரொட்டி, பரோட்டா, புலவு, பிரியாணி ஆகிய எந்த ஒரு உணவுடனும் மிக அருமையாக ருசிக்கும். வாருங்கள் நண்பர்களே, மட்டன் குருமாவின் சுவையான ஒரு செய்முறையை இங்கே பார்க்கலாம்
தேவையான பொருள்கள் :
நெஞ்செலும்பு கறி துண்டுகள் – ½ கிலோ, நன்கு கழுவியது
கெட்டி தயிர் – 1 கப்; கடைந்தது
சமையல் எண்ணெய் – 5 தேக்கரண்டி
பூண்டு - 5 பல் ; நீளவாக்கில் அரிந்தது
பெரிய வெங்காயம் – 1 ; நீளவாக்கில் அரிந்தது
பச்சை மிளகாய் – 3 நீளவாக்கில் அரிந்தது
புதினா இலைகள் - கைப்பிடி அளவு; நன்கு கழுவியது
மஞ்சள் தூள் – ¼ தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 ½ தேக்கரண்டி
மல்லி தூள் – 1 ½ தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி தழை - அலங்கரிக்க
விழுதாக அரைக்க :
தேங்காய் துருவல் - 1 கப்
கிராம்பு - 6
பட்டை – 2 இன்ச் அகலத்திற்கு
இஞ்சி – 2 இன்ச் நீளம்
பூண்டு – 5 பல்
சின்ன வெங்காயம் - 7
முதலில் மிக்சியில், சின்ன வெங்காயம் தவிர மற்ற எல்லாவற்றையும் நீர் சேர்த்து நன்கு அரைக்கவும். இறுதியில், வெங்காயம் சேர்த்து ஒன்றும் பாதியுமாக அரைத்து தனியாக வைக்கவும்.
செய்முறை :
1) ஒரு குக்கரில் கறி துண்டுகளுடன், அரிந்த பெரிய வெங்காயத்தில் பாதி அளவு, ஒரு சிட்டிகை மல்லி தூள், சிறிது உப்பு, சிறிது கொத்துமல்லி தழை, ஒரு கப் நீர் எல்லாம் சேர்த்து மட்டன் வேகும் வரை சமைக்கவும்.
2) ஒரு நான் ஸ்டிக் பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு தாளிக்கவும்.
3) பின்பு பச்சை மிளகாய், மீதி வெங்காயம், புதினா தழைகள் சேர்த்து வாசனை வரும் வரை வறுக்கவும்.
4) வெந்த மட்டன் துண்டுகளை மட்டும் போட்டு வதக்கி விட்டு, மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.
5) சில நிமிடம் கிளறினால், மட்டன் துண்டுகள் மீது மசாலா பொருள்கள் நன்கு படர்ந்து இருக்கும்.
6) இப்போது, அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து வதக்கவும்.
7) சில நிமிடம் வாசனை வரும் வரை நன்கு வதக்கியதும், கடைந்த திருடன் ௧ கப் நீர் சேர்த்து நடுத்தர தீயில் கொதிக்க விடவும்
8) 15 நிமிடம் கொதித்ததும், மூடி வைத்து சிறு தணலில் 5 நிமிடம் கொதிக்க விடவும்.
9) நறுமணத்துடன் எண்ணெய் பிரிந்து குருமா மீது வந்ததும், அடுப்பை அனைத்து கொத்தமல்லி தூவி பரிமாறவும் .
பகிர்வுக்கு நன்றி..
ReplyDeleteசமயலில் எனக்கு நல்ல ஆர்வம் சகோதரி(அதுக்காக நான் தான் வீட்டில் சமையல் என்று யாரும் நினைக்கவேண்டாம்.ஹி.ஹி.ஹி.ஹி)
ReplyDeleteஇந்த தெளிவான விளக்கத்துக்கு நன்றி
pittar pak shuru hogaya shayad .... dont post non veg recipes.... i will cry!!!!!
ReplyDeleteவர வர யாழினி ஆண்கள் சமையல் செய்றஅளவுக்கு சொல்லி குடுதுருவீங்க போல arumai nandri veekay
ReplyDeleteவித்தியாசமான ரெசிப்பி..
ReplyDeleteமட்டன் குருமா செய்முறையினைப் படங்களோடு பகிர்ந்து நாவில் எச்சில் ஊற வைத்து விட்டீர்களே.
கருன் , பாராட்டிற்கு நன்றி
ReplyDeleteகே.எஸ்.எஸ்.ராஜா, தங்களை போல சமையலில் ஆர்வம் உள்ளவர்களுக்காக தான் இது போன்ற குறிப்புகளை பகிர்கிறோம்.உங்கள் பாராட்டால் மகிழ்கிறோம். மிக்க நன்றி.
ReplyDeleteகிரண் வருக, நீ கூறியது போல புரட்டாசியில் அசைவம் தவிர்ப்போம்.கவலை வேண்டாம். கருத்திற்கு நன்றி.
ReplyDeleteவீகே , எங்கள் உள்நோக்கத்தை சரியாக கணித்து இருக்கிறீர்கள். எங்கள் சமையல் குறிப்புகள் இல்லத்தரசிகளுக்கு மட்டும் அல்ல வேலை நிமித்தமாக தனித்து வாழும் ஆண்களுக்கும் உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் தான் பகிரப்படுகின்றன.
ReplyDeleteவருகைக்கு நன்றி !
நிருபன் அண்ணா , வழக்கமான முறையில் இருந்து சற்று வேறுபட்டு சுவைப்பட பரிமாறுவதில் தான் ருசி அதிகம். தங்கள் ஊக்கத்திற்கு நன்றி அண்ணா.
ReplyDelete