Social Icons

.

Sunday, September 4, 2011

போடா போடா புண்ணாக்கு !



போடா போடா புண்ணாக்கு !

அந்த சலூன்காரருக்கு ஒரே பெருமை ! தன் வாடிக்கையாளிடம் தன் சாகச பெருமைகளை பீற்றி கொண்டிருந்தார். " சார், இந்த கடைய நடத்த என்ன எல்லாம் வேலை செய்ய வேண்டி இருக்கு சார். என்கிட்ட வர எல்லாரும் திருப்தியா போகணும்னு யோசிச்சி யோசிச்சி புதுசு புதுசா 'கட்டிங்' பண்ணணும், வேற எந்த சலூன்லயும் இல்லாத வசதி இங்க இருக்கு சார்"

வாடிக்கையாளர் : அப்படியா ? அப்ப நீங்க ரொம்ப புத்திசாலி னு சொல்லுங்க

.கடைகாரர் : அதுல என்ன சார் சந்தேகம் ? இந்த காலத்துல என்ன மாதிரி மூளையோட இல்லை னா பொழைக்க முடியாது சார்.

வாடிக்கையாளர் : ஹும்....

.கடைக்காரர்: சாருக்கு இன்னும் சந்தேகம் போகலே போல. இருங்க இன்னும் கொஞ்ச நேரத்துல என் கடைக்கு ஒரு சின்ன பையன் வருவான். தினமும் வருவான். என்கிட்ட காசு கேப்பான், நான் ஒரு கையில 5 ரூபாயும் இன்னொரு கையில 2 ரூபாயும் வெச்சி எது வேணும்னாலும் எடுத்துக்கோ னு சொல்லுவேன். ஹா....ஹா....அவன் தினமும் 2 ரூபாய்யை எடுத்துகிட்டு போவான். முட்டா பய ஹா...ஹா....! பாத்துகிட்டே இருங்க.

வாடிக்கையாளர் : சரி...இன்னிக்கி பாக்கலாம்.

சொன்னது போலவே ஒரு சிறுவன் கடைக்கு வந்தான்.

சிறுவன்அண்ணா வணக்கம். நல்லா இருக்கீங்களா ?

.கடைக்காரர் : டேய், வாடா தம்பி, நல்லா இருக்கியா ? என்ன வேணும் டா ?

சிறுவன்அண்ணா முட்டாய் வாங்க காசு குடுண்ணா.

.கடைக்காரர் : ஹா..ஹா...சரி, இந்தா ..5 ரூபாய், 2 ரூபாய் எது வேணுமோ எடுத்துக்கோ.

சிறுவன் அவர் கையில் இருந்து 2 ரூபாய்யை எடுத்துக்கொண்டு ஒடுகிறான்.

வாடிக்கையாளர் : டேய் தம்பி. கொஞ்சம் நில்லுடா . நானும் பாத்துகிட்டே தான் இருந்தேன். அவர்தான் 5 ரூபாயும் 2 ரூபாயும் காட்டி எது வேணுமோ எடுத்துக்கோ னு சொல்றாருல்ல, சரியான ஏமாளியா இருக்கியே? 5 ரூபாய் எடுத்துகிட்டா நெறைய முட்டாய் வாங்கலாம்ல ? ஏண்டா இவ்ளோ முட்டாளா இருக்கே ?

சிறுவன் : சார் , நீங்க வெளிய வாங்க சார். சொல்றேன்.

. கடைக்காரர் : ஹா..ஹா...போய் கேளுங்க சார். என்ன நொண்டி சாக்கு சொல்றான் பாப்போம்.

வாடிக்கையாளர் கடைக்கு வெளியே சென்று சிறுவனை பார்க்கிறார்.

வாடிக்கையாளர் : இப்போ சொல்லுடா.

சிறுவன் : சார், அது வேற ஒண்ணும் இல்ல, தினமும் அண்ணா ஒரு 5 ரூபாயும் ஒரு 2 ரூபாயும் காட்டி எது வேணும் னு கேக்கறார். நான் 2 ரூபாய் எடுத்துகிட்டு ஓடினா அவருக்கு என்னை ஏமாத்தின மாதிரி ஒரு சந்தோஷம். ஆனா என்னிக்கு நான் 5 ரூபாய் எடுக்கறேனோ, அவ்ளோதான் அடுத்த நாள் எனக்கு கிடைக்கிற 2 ரூபாயும் கிடைக்காம போயிடும். ஒரு நாளைக்கு கிடைக்கிற 5 ரூபாய் பெரிசா இல்ல தினமும் கிடைக்கிற 2 ரூபாய் பெரிசா சார் ?

வாடிக்கையாளர் : *??##@!$** ??>= ! 

நீதி : எல்லாம் தெரிந்தவரும் யாருமில்லை, எதுவுமே தெரியாதவரும் யாரும் இல்லை. தோற்றத்தை பார்த்து எடை போட கூடாது.



10 comments:

  1. நல்ல கருத்துள்ள கதை இது. இதில் இருந்து தெரிகிறது "யாரயும் தோற்றத்தை வைத்து எடை போடா கூடாது என்று" உங்களின் ஆக்கங்களுக்கு நன்றிகள் யாழினி தோழி மிகவும் பயனுள்ள தகவல்களை இங்கு தருகின்றமைக்கு எனது நன்றிகள்
    உங்கள் சேவை மேலும் என்னை போண்டோருக்கு தேவை. மீண்டும் எனது நன்றிகள்.

    ReplyDelete
  2. இது தான்....குறிப்பறிந்த் பிச்சையிடு என்று சொல்லுவார்களோ...

    ReplyDelete
  3. நான் தமிழன், வணக்கம் வருக தம்பி !

    உங்கள் கருத்திற்கு நன்றி.... யாழ் இனிதின் சேவை உங்களை போன்றோரின் ஆதரவால் கண்டிப்பாக தொடரும். நன்றி !

    ReplyDelete
  4. நிரூபன் அண்ணா :)

    ReplyDelete
  5. நல்ல கருத்து. "நிறைகுடம் நீர் தளும்பாது"

    ReplyDelete
  6. தலைப்பு வில்லங்கமா இருக்கே?

    ReplyDelete
  7. அடுத்தவங்களுக்கு சந்தோசத்தையும் குடுத்து தனக்கு கிடைக்கிற ஆதாயத்தையும் நினைத்து பார்க்கிற அந்த சிறுவனின் குணம் நம் அனைவர்க்கும் வரவேண்டும் என்பதை உணர்த்திய இந்த கருத்து மிகவும் அருமை நன்றி...வீ..கே ..tamildhesamchat.com

    ReplyDelete
  8. மதியின் வலையில், தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி

    ReplyDelete
  9. கருன் ஹா ஹா ஹா, என்ன செய்வது, இப்போதெல்லாம் தலைப்பை பார்த்து தான் பகிர்வை படிக்கிறார்கள்.

    ReplyDelete
  10. வீகே ! ஆம் உண்மைதான். நம்மில் பலருக்கு தன் மீது உள்ள அக்கறையில் பாதி அளவு கூட அடுத்த்வர் மீது இருப்பதில்லை. வயதில் குறைந்தவனாக இருந்தாலும் மனதால் முதிர்ந்து விட்ட ஒரு சிறுவனின் கதை இது.

    ReplyDelete

 

வாசித்தவர்கள்

இன்று ...

உங்கள் ஆதரவால் ...!

tamil blogs traffic ranking