Social Icons

.

Thursday, September 1, 2011

சிந்து சமவெளி நாகரீகம்



Indus Valley Civilisation 
சிந்து சமவெளி நாகரீகம்

வணக்கம் நண்பர்களே, டைனாசர் பற்றிய ஆறு தொடர் சங்கிலியில் எங்களுடன் கை கோர்த்து ஆதரித்தமைக்கு நன்றிகள்!. அழிந்து போன ஒரு உயிரினத்தை பற்றி விவரமாக அறிந்து கொண்டதை அடுத்து, மனித காலடி சுவடுகளை தரணியில் தேடலாம் வாருங்கள்.  வாழ்க்கையை முதல் முதலில் சரியாக அணுகிய பல உலக நாகரீகங்கள் இன்று நம் மத்தியில் இல்லை. ஆனாலும் அவர்கள் விட்டு சென்ற தடயங்களை தேடி அவர்களை பற்றி அறிந்து கொள்ளும் சிறு முயற்சி தான் இந்த தொடர். எப்போதும் போல் இதிலும் உங்கள் ஆதரவை கோரும் யாழ் இனிது !

 

பாரத நாட்டின் ஓங்கிய பல பெருமைகளுக்குள், உலக மக்களுக்கு நாம் கற்றுக் கொடுத்த நாகரீகமாகிய சிந்து சமவெளி நாகரீகத்தை பற்றிய தேடலோடு, இத்தொடரைத் துவங்குவோம்.

 

சிந்து சமவெளி நாகரீகம் - ஒரு சிறு குறிப்பு :

உலகத்திலேயே முதன் முதலில் தோன்றிய நாகரீகங்களில், மிகவும் பழமையானதும் மிகவும் சிறப்பானதுமாக கருதப் படுவது, சிந்து நதிக்கரையில் தோன்றிய இந்து சமவெளி நாகரீகமாகும். கட்டடக் கலைக்கும், நவ நாகரீக உலகத்திற்கும், எகிப்து மற்றும் மேசபொடமியா போன்ற மேற்கத்திய நாகரீகங்களுக்கும் சவாலாக அமைந்த சிந்து சமவெளி நாகரீகம், அதன் வாழ்கை முறைக்காக பலராலும் இன்றளவும் பாராட்டப் படுகிறது. தாங்கள் வாழ்ந்த காலத்தில் சிந்தனை மிகுந்த, புதுமையான உத்திகளை பயன்படுத்தி அவர்கள் மேற்கொண்ட கட்டுமான பணிகள் 5000 ஆண்டுகள் தாண்டியும், இயற்கை சீற்றங்களை எதிர் கொண்டும், இன்றளவும் எஞ்சி நிற்கின்றன. இதற்காகவே, சிந்து சமவெளி நாகரீகத்தை ' நாகரீகமான நாகரீகம்' என்ற பட்ட பெயரோடு அழைத்தால் மிகையாகாது.


மூலம் :

தற்காலத்தில் உள்ள பாகிஸ்தான் மற்றும் வடமேற்கு இந்தியவின் பஞ்சாப் பகுதியில் இந்த நாகரீகம் தோன்றியது. இப்பகுதியில் சளைக்காமல் திரண்டு ஓடி, இவ்விடத்தை செழிப்பாக்கிய இந்து நதியையும், அதன் கிளைகளையும், நதிப் படுகையையும் சுற்றி இந்த நாகரீகம் வளர்ந்தது. சுமார் 12,60,000 சதுர கிலோ மீட்டர்கள் வரை பரவி இருந்ததால், இது உலகின் மிக பெரிய நாகரீகமாக போற்றப்படுகிறது.

 

கி.மு. 3000 ஆண்டு முதல் கி.மு. 1200 ஆண்டு வரை இந்த நாகரீகம் செழித்தோங்கி வளர்ந்ததாக வரலாற்று சான்றுகள் கூறுகின்றன. கி.மு. 2600 தொடங்கி கி.மு. 1900 வரை உள்ள காலகட்டத்தில் உச்ச நிலை அடைந்த இந்த நாகரீகம், மோகன்ஜெதாரோ, ஹரப்பா என்ற இரு பெரும் நகரங்களின் மூலம் கலாசாரம் கட்டடக் களை மற்றும் வாழ்க்கை முறையை பேணி வளர்த்தது.



வளர்ச்சி :


சிந்து சமவெளி நாகரீகத்தில் வாழ்ந்த மக்கள் வெகுவாக முன்னேறி காணப்பட்டனர். தங்கள் வாழ்விற்கும், வசதிக்கும் தேவையான அனைத்தும் சுற்றியுள்ள இயற்கை வளங்கள் மற்றும்நீர் நிலையின் மூலமாகவும் அவர்கள் நிறைவேற்றி கொண்டனர். உதாரணத்திற்கு தற்காலத்தில் நாம் வீடுகள் கட்ட பயன்படுத்தும் செங்கற்களை அவர்கள் அப்போதே உருவாக்க தொடங்கிவிட்டனர். மக்கள் குளிக்க வசதியாக "பெரும் குளியல்தொட்டி" ஆங்கிலத்தில் "க்ரேட் பாத்" என்கிற 12 மீட்டர் நீளமும், 7 மீட்டர் அகலமும், 2.4 மீட்டர் ஆழமும் உள்ள மாபெரும் நீச்சல் குளத்தை ஊரின் நடுவே உருவாக்கினார்கள். கனமான சுவர் மற்றும் உயர்ந்த கூறை வீடுகள் அவர்களை வெயில் காலத்தின் கடும் வெப்பத்திலிருந்து பெரிதும் காத்தன. குடும்பம் மற்றும் சுற்றுப்பட்டு மக்களுக்காக தனி தனி கிணறுகளும் சிந்து சமவெளி நாகரீகத்தில் காணப்பட்டன.





மொழியும் கலாச்சாரமும் :

சிந்து சமவெளி மக்கள் குறியீடுகள் நிறைந்த எழுத்துக்களை மொழியாக பயன்படுத்தினார்கள். கி.மு. 3300 தொடங்கி கி.மு 2800 க்கு இடையில்தான் அவர்கள் மொழியை பயன்படுத்த தொடங்கினார்கள் என வரலாற்று சான்றுகள் தெரிவிக்கின்றன. பானைகளை சுடுவதற்கு முன் அதன் அடி பகுதியில் தங்கள்  எழுத்துக்களை செதுக்கி வைத்தனர் அக்கால மக்கள்.



பலவித கலாச்சார வழக்கங்களை இந்து சமவெளி மக்கள் பின்பற்றினார்கள். விவசாயம் மட்டுமே தொழில் என இருக்க, நகை தொழிலிலும் அவர்கள் ஈடுபட்டனர். ஹரப்பாவில் வாழ்ந்து வந்த மக்கள் வான்சாத்திரத்தில் தேர்ச்சி பெற்றவர்களாக விளங்கினர். கி.மு 23 ம் நூற்றாண்டு கண்ட அவர்கள் பொற்காலத்தில் தான், பஞ்சாங்கம் , நாட்குறிப்பு போன்றவைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இசைக்கருவிகள் கண்டுபிடிக்கபடாத அந்த காலத்திலும், அவர்கள் முட்டை வடிவ "விசில்" (ஊதுகுழல்) களை கண்டுபிடித்தார்கள். இன்றளவிலும் அது போன்ற ஊதுகுழல்கள் பாகிஸ்தான் மற்றும்  வட கிழக்கு இந்தியாவின் கிராமங்களில் காணலாம். களிமண் சிற்பங்களும், பொம்மைகளும் அவர்களால் செய்யப்பட்டன. அப்போதே பீங்கான்,தாமிரம் போன்றவற்றால் செய்யப்பட்ட பாண்டங்கள் அவர்கள் மத்தியில் புழங்கின.




தங்க ஆபரணங்களும் அக்காலாத்தில் மக்களால் பயன்படுத்தப்பட்டன. செல்வந்தர்கள் தங்களிடம் உள்ள நகைகளை வீட்டின் நிலைக்கு அடியில் புதைத்து வைத்து பாதுகாத்தனர். நகைகளை இறந்தவர்களுடன் புதைத்துவிட்டு அடுத்த தலைமுறை அதை எடுத்து பயன்படுத்தும் வழக்கமும் அவர்களிடம் இருந்தது



பொருளாதாரம் :

சிந்து சமவெளி நாகரீகத்தில் விவசாயம் முக்கிய தொழிலாக இருந்தாலும், வணிகமும் அவர்கள் காலத்தில் செழித்தது என கூறலாம். மெஸாபட்டோமியா, தென்னிந்தியா, மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற இடங்களிலிருந்து தங்கம், வெள்ளி, தாமிரம் போன்ற உலோகங்களை தங்கள் விளைச்சலுக்கு பதிலாக அவர்கள் வியாபாரம் செய்தனர். ஆற்று வெள்ளத்திலிருந்து தங்கள் பயிர்களை காப்பாற்ற ஆற்றை ஒட்டி சுவர்கள் எழுப்பினார்கள் அக்கால மக்கள். விளை நிலங்களில் கோதுமை, பார்லீ, பட்டாணி மற்றும் பூசனி போன்றவற்றை அவர்கள் விளைவித்தார்கள்.  முதன்முதலில் ஆடைக்கு பயன்படுத்த பருத்தியை விளைவித்தது சிந்து சமவெளி மக்கள் தான் என கூறப்படுகிறது.



பலவித வளர்ப்பு பிராணிகளுக்கு இடையில் யானையையும் அதன் தந்தத்திற்காக அவர்கள் வளர்த்தனர். பணப்புழக்கம் இல்லாத அந்த காலத்தில் வணிகம் மற்றும் வரிகளுக்காக எடைக்கற்கள் பயன்படுத்தப்பட்டன. 0.856 கிராம் எடையுள்ள எடைக்கல்லை தொடக்க எடையாக அவர்கள் பாவித்தனர்.



வீழ்ச்சி :

சிந்து சமவெளி நாகரீகத்தின் வீழ்ச்சிக்கு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 4 காரணங்களை முன்வைக்கிறார்கள்.

1) அதீத வெள்ளம் வந்து, அவர்கள் பகுதிகளை சூழ்ந்து மூழ்கடித்தன.

2) மக்கள் தொகை நோய் மூலம் விரைவாக மற்றும் கணிசமாக குறைந்தது.

3) மக்கள் நம்பி இருந்த "சரஸ்வதி" ஆறு வற்ற தொடங்கி விட்டது.

4) ஆரியர்கள் படையெடுப்பினால் சிந்து சமவெளி நாகரீகம் சூறையாடப்பட்டு அழிந்து போனது.

இதில் 4 ம் காரணம் ஏற்றுக்கொள்ள இயலாது என வல்லுனர்கள் தற்போது நிரூபித்திருக்கிறார்கள். ஆக மேற்க்கூறிய 3 காரணங்களினால் அந்த நாகரீகம் அழிந்திருக்க கூடும் என அனுமானிக்கபடுகிறது.



இறுதியுரை :

சிந்து சமவெளி நாகரீகத்தை "நாகரீகம்" என அழைக்கலாமா என்பதில் பல்வேறு ஐயப்பாடுகள் உள்ளன. சாதி வாரியான இடுகாடுகள் அக்காலத்தில் இருந்ததற்கு சான்றுகள் ஏராளமாக கண்டறியப்பட்டுள்ளதால், இதை எப்படி "நாகரீகம்" என்று அழைப்பது என வாதங்கள் நிகழ்கின்றன.


சில ஆராய்ச்சியாளர்கள், இந்து சமவெளி காலத்தில் மாவட்ட வாரியான ஆட்சி காணப்படவில்லை என்றும், மக்களை ஆண்டது சில அரசர்கள் போன்ற தலைவர்களே என்றும் தங்கள் வாதத்தை முன்வைக்கிறார்கள்.

மனிதன் தற்போது மார்தட்டி கொள்ளும் பல நாகரீக வளர்ச்சிகள் சிந்து சமவெளி காலத்திலேயே தொடங்கிவிட்டன என்பது என்னவோ சான்றுகள் மூலம் வெளிப்படுகின்ற கண்கூடான உண்மையாகும். 


32 comments:

  1. சிறந்த விளக்கம்.நல்ல பதிவு,வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. நல்ல வரலாற்று பதிவு, சுவராசியமான எழுத்து நடையில் கொண்டு செல்கிறீர்கள்,எப்போதுமே வரலாற்று சம்பவங்களை படிக்கும் போது அலுப்பு தட்டாது உங்கள் பதிவும் அப்படியே....
    குட் பதிவு

    ReplyDelete
  3. முதலில் தலைப்பை மாற்றுங்கள்.சிந்து சமவெளி நாகரீகம் என்பது தான் சரியான தலைப்பு.

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் சரியாகதான் உள்ளது, கண்ணை திறந்து பாரும்

      Delete
  4. இந்து வெளி நாகரிகம் பற்றிய விளக்கப் பதிவினைத் தொடங்கியிருக்கிறீங்க.

    விரிவான பின்னூட்டங்களோடு பின்னர் வருகிறேன்.

    ReplyDelete
  5. வணக்கம் சகோதரி இன்றுதான் உங்கள் தளத்திற்கு முதன் முதலாக வருகின்றேன்.உங்கள் எழுத்து நடை அருமையாக உள்ளது.விரிவான விளக்கங்களோடு உங்கள் பதிவுகள் உள்ளன.இந்து சமவெளிநாகரிகம் பற்றி அழகாகவிளக்கியுள்ளீர்கள்.தொடர்ந்து நிறையா எழுதுங்கள் வாழ்த்துக்கள்

    அன்புடன்
    K.s.s.Rajh

    ReplyDelete
  6. அழகான எழுது நடையுடன் அருமையாக பதிவிட்டுள்ளீர்கள்.

    //மோகன்ஜெதாரோ, ஹரப்பா//
    மோகன்ஜெதாரோ, ஹரப்பா - மறைந்த தரை மற்றும் அரப்ப என்ற தமிழ் சொல்லே மருவி இப்படி ஆகிவிட்டது

    ReplyDelete
  7. Please change the topic ,Otherise it would mean that you are trying to impose religious ideology in the history . 4th reason is not proved as invalid and it is said like that by so called RSS people . You believe so if you do do not analyse the history and society..

    ReplyDelete
  8. ///முதலில் தலைப்பை மாற்றுங்கள்.சிந்து சமவெளி நாகரீகம் என்பது தான் சரியான தலைப்பு.//
    Correct,

    ReplyDelete
  9. @ யோகா அண்ணா!
    யாழ் இனிதிற்கு உங்கள் வருகை நல்வரவாகட்டும்.
    மனித நாகரீகம் குறித்து, நாங்கள் வெளியிடும் முதல் பதிவு இது, உங்கள் ஊக்குவிப்பால், மேலும் இத்தொடர் சிறந்து விளங்கும் என்பதில் ஐயமில்லை. தொடர்ந்து வாருங்கள்.நன்றி.

    ReplyDelete
  10. ஃபிரோஸ், வருக ! பாராட்டிற்கு நன்றி.

    ReplyDelete
  11. சார்வாகன் அவர்களே ! யாழ் இனிது உங்களை அன்புடன் வரவேற்கிறது. ரசித்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்து வாருங்கள்.

    ReplyDelete
  12. @ துஷ்யந்தன், எங்கள் தளத்திற்கு வருகை தந்து எங்களை சிறப்பித்ததற்கு எங்கள் மனமார்ந்த நன்றி. வரலாற்று கட்டுரைகள் பல தகவல் நமக்கு சொன்னாலும், சுவை பட அதை விளக்குவதின் மூலம் தான் மக்களிடம் அதை கொண்டு செல்ல முடியும். அப்படி பட்ட ஒரு முயற்சி தான் இது. தொடர்ந்து கிட்டும் உங்கள் ஆதரவால், நிச்சயம் இன்னும் பல தகவல் மாறாத சுவையுடன் இங்கு பரிமாறப்படும். உங்கள் மேலான ஊக்கத்தை எதிர்நோக்கி.

    ReplyDelete
  13. @ Anonymous
    // முதலில் தலைப்பை மாற்றுங்கள்.சிந்து சமவெளி நாகரீகம் என்பது தான் சரியான தலைப்பு. //

    அனானிமஸ் நண்பரே, தாங்கள் கூறுவதும் சரிதான். ஆயினும் நாங்கள் மேற்கோளுக்காக அணுகிய சில குறிப்புகளில் "இந்து சமவெளி" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், உங்கள் கருத்திற்கு நன்றி. மீண்டும் ஒரு முறை ஆராய்ந்து, சரியான தலைப்பை நிச்சயம் சூட்டுவோம் என தாழ்மையாக தெரிவித்து கொள்கிறோம்.

    ReplyDelete
  14. நிரூபன் அண்ணா,உங்கள் பாராட்டிற்கு நன்றி. மேலும் சில அரிய தகவல்களை கொண்டு வரும் முயற்சி தொடரும், நீங்களும் பங்கு பெறலாம் அண்ணா.

    ReplyDelete
  15. @ கே.எஸ்.எஸ்.ராஜா அவர்களே, முதற்கண் யாழ் இனிதிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.தங்களை போல் உள்ள வலைத்தள விரும்பிகளின் ஆதரவு மற்றும் கருத்துக்களின் துணையோடு,இனி வரும் தொடர்களிலும் எளிமை காப்போம் அதன் சுவை மாறாமல். நன்றி.தொடர்ந்து வருக.

    ReplyDelete
  16. @ மதியின் வலையில், அஹா !வித்தியாசமான பெயர் :)

    பெயருக்கேற்றார்போல், சுவையான தகவல் அளித்தமைக்கு மிக்க நன்றி, இனி வரும் பதிப்புகளில் மேலும் தமிழ்சொற்களை பயன்படுத்துவோம்.

    தொடர்ந்து ஊக்குவியுங்கள்

    ReplyDelete
  17. @ Anonymous says
    // Please change the topic ,Otherise it would mean that you are trying to impose religious ideology in the history . //

    பெயர் கூற விரும்பாத நண்பரே,
    தங்கள் கருத்திற்கிணங்க மீண்டும் ஒரு முறை பல தகவல்களை அலசி, இந்த கட்டுரையின் தலைப்பை "சிந்து சமவெளி நாகரீகம்" எனவே மாற்றுகிறோம். தங்கள் வெளிபடையான பின்னூட்டத்திற்கு எங்கள் பாராட்டுக்கள்.


    // 4th reason is not proved as invalid and it is said like that by so called RSS people . You believe so if you do do not analyse the history and society.. //

    தாங்கள் இந்த கட்டுரையின் நான்காம் கருத்தில் மாற்று கருத்து கொண்டிருக்கின்றீர்கள்.

    "4) ஆரியர்கள் படையெடுப்பினால் இந்து சமவெளி நாகரீகம் சூறையாடப்பட்டு அழிந்து போனது.

    இதில் 4 ம் காரணம் ஏற்றுக்கொள்ள இயலாது என வல்லுனர்கள் தற்போது நிரூபித்திருக்கிறார்கள். ஆக மேற்க்கூறிய 3 காரணங்களினால் அந்த நாகரீகம் அழிந்திருக்க கூடும் என அனுமானிக்கபடுகிறது."

    நாங்களே இப்பதிவில் 4ம் கருத்தை வல்லுநர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதாக தான் சொல்லி இருக்கிறோம்.

    ஒரு வேண்டுகோள். இது போன்ற கருத்துக்கள் மிகவும் வரவேற்க்கதக்கது. ஆயினும் இதை பெயர் அறிய முடியாத பின்னூட்டமாக கூறுவதை காட்டிலும், தங்கள் பெயரோடு நீங்கள் கூறினால், மேலும் பாராட்டுவோம். தொடர்ந்து ஊக்கம் வேண்டும், யாழ் இனிது !

    ReplyDelete
  18. nice post mosi(yazh) .... as i said ur previous post seems to be weak ...u replied me that most of the prople know abt ganesh chathurti...so its more than enough information ....its a misconception!!! .... as being a hindu i liked to know entirely abt ramzan, same way muslim people or other religious people ill also like to know abt ganesh chathurti simple .....ya it was new info ... my point is, it could have been better.. ....ok its history now ..... let me move ahead to this post .....
    It is short and sweet .....i can see the work u had done behind the scene ...the pictures u post here is real one??? or just an set up by the archaeologist abt the prototype / models used by people ??!!!! great going!! good luck

    ReplyDelete
  19. வாவ்...உங்களது blog டிசைன் வித்தியாசமாகவும் அழகாகவும் இருக்கிறது... இருங்கள் படித்துவிட்டு வருகிறேன்

    ReplyDelete
  20. சிந்துவெளி நாகரீக பதிப்பை படித்த பிறகு... நாகரீகத்தின் அடித்தளமே சிந்து சமவெளி என்பதை இந்த பதிவு உணர்த்துகிறது...நீங்கள் சொன்னது போல் நாகரீகத்தின் நாகரீகம் என்று அழைப்பதே சரி எனத்தோன்றுகிறது... பகிர்வுக்கு நன்றி... தங்களது முன்பைய பதிவுகளையும் படிக்க ஆவல் குடி கொண்டுவிட்டது...அடுத்து வந்து படிக்கிறேன்

    ReplyDelete
  21. மீண்டும் வணக்கம் சகோதரி,
    சிந்து வெளி நாகரிகம் பற்றிய அருமையான வரலாற்றுப் பதிவினைத் தந்திருக்கிறீங்க. சிந்து வெளியில் தொல் பொருள் ஆராய்ச்சியினை மேற்கொண்ட சேர்.ஜோன் மார்ஷல், ஹன்னிங்காம்...முதலிய மேலை நாட்டு அறிஞர்கள் பற்றியும் குறிப்பிட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

    ReplyDelete
  22. நல்ல பதிவு.”இந்து சமவெளி’ என்பதை ;சிந்து சமவெளி’என மாற்றியது சரியானதே.அந்நாகரிகம் அழிவதற்கான 4 வது காரணம் பற்றி சர்ச்சைகளோடு வேறு பல சர்ச்சைகளும் நடந்தது உண்டு.ஆராய்ந்து தொடருங்கள் சகோ.நன்றி.

    ReplyDelete
  23. கிரண், பாராட்டிற்கு மிக்க நன்றி ! நீங்கள் சொல்வது போல் இறுதி புகைப்படம் புனைவு தான், ஆயினும் மற்ற நிழல்படங்கள் யாவுமே பல குறிப்புகள் மூலம் பெற்றவை. இன்னும் பல நாகரீகங்கள் பற்றி பகிர்ந்து கொள்ள எண்ணம்.

    ReplyDelete
  24. // வாவ்...உங்களது blog டிசைன் வித்தியாசமாகவும் அழகாகவும் இருக்கிறது... இருங்கள் படித்துவிட்டு வருகிறேன் //


    மாய உலகம், யாழினிதிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.நிதானமாக படித்து விட்டு வாருங்கள் !பாராட்டிற்கு நன்றி.

    ReplyDelete
  25. // சிந்துவெளி நாகரீக பதிப்பை படித்த பிறகு... நாகரீகத்தின் அடித்தளமே சிந்து சமவெளி என்பதை இந்த பதிவு உணர்த்துகிறது...நீங்கள் சொன்னது போல் நாகரீகத்தின் நாகரீகம் என்று அழைப்பதே சரி எனத்தோன்றுகிறது... பகிர்வுக்கு நன்றி... தங்களது முன்பைய பதிவுகளையும் படிக்க ஆவல் குடி கொண்டுவிட்டது...அடுத்து வந்து படிக்கிறேன் //


    மாய உலகம்,சிந்து சமவெளி நாகரீகம் உண்மையில் ஒரு உன்னத நாகரீகம் ஆகும், ஆகையால் தான் இந்த தொடரை இதன் மூலம் தொடங்கி இருக்கிறோம்.எங்கள் மற்ற பதிப்பின் மீதும் நாட்டம் காட்டும் உங்கள் தோழமைக்கு மனமார்ந்த நன்றிகள்.தொடர்ந்து வருக .

    ReplyDelete
  26. // தமிழ் மணம் 5 //

    மாய உலகம், உங்கள் வாக்குப்பதிவிற்கு நன்றி.

    ReplyDelete
  27. நிரூபன் அண்ணா, உங்கள் பாராட்டு எங்களுக்கு மிகவும் ஊக்கம் அளிக்கிறது, நன்றி. ஆம், நீங்கள் கூறியது போல சிந்து சமவெளி நாகரீகத்தை உலகிற்கு உணர்த்திய பல அறிஞர்கள் பற்றி நாங்கள் குறிப்பிடவில்லை, ரொம்ப நல்ல யோசனை அண்ணா, அடுத்த தொடரில் இதை கவனத்தில் வைத்து கொள்வோம்.

    ReplyDelete
  28. R.Elan, யாழினிதிற்கு வருகை தந்தமைக்கு நன்றி.சிலரின் யோசனைக்கு பிறகு தான் அவர்கள் கருத்திற்க்கிணங்க பெயர் மாற்றம் செய்தோம்.மேலும் இங்கு பகிரப்பட்ட கருத்துக்கள் நாங்கள் அணுகிய பல குறிப்புகள் மற்றும் தளங்கள் மூலம் பெற்றவை தான், எங்கள் சொந்த கருத்துக்கள் ஆகா. சிந்து சமவெளி நாகரீகம் எவ்வாறு முடிவிற்கு வந்தது என்பதும் பல வல்லுநர்களின் அனுமானம் ஆகுமே தவிர , இந்த மாபெரும் சரித்திர நிகழ்வுகள் கற்பனையாக புனைதல் இயலாத காரியம். பாராட்டிற்கு நன்றி.

    ReplyDelete
  29. சிந்துவெளி மக்கள் மெசொபொத்தேமியாவிலிருந்து வந்து குடியேறியவர்களே. ஒரு குறுகிய காலத்தில் ஒரு இனம் வளர்ச்சிபெற்று கட்டடங்கள் கட்டுமளவு உயர்ந்திருக்க முடியாது. உலகின் முதல் நாகரிக மாந்தர் தமிழர் என்னும் உண்மையை மூடிமறைப்பதே மேற்குலகினரின் நோக்கம். அதனாலேயே சுமேரியருக்கும் சிந்து வெளி மக்களுக்கும் தொடர்புஇருப்பதாக அவர்கள் காட்டிக்கொல்வதே இல்லை. நாங்களும் அவர்கள் சொல்வதைக் கேட்டுத் தலையாட்டுவதொடு சரி. இந்த நவீனகாலத்தில் மரபுயிரனுவைக் கொண்டே அனைத்தையும் நிறுவ முடியுமே. ஐம்பதாயிரம் ஆண்டுகள் வாழ்ந்த மான்த்தர் பற்றிக் கூறுபவர்களுக்கு ஐயாயிரம் ஆண்டுள் நடந்த மாந்தர் கதை அவர்களின் மரபுயிரனு பற்றியா தெரியவில்லை ???

    ReplyDelete

 

வாசித்தவர்கள்

இன்று ...

உங்கள் ஆதரவால் ...!

tamil blogs traffic ranking