Social Icons

.

Sunday, December 22, 2013

கோழி பிரியாணி


Chicken Briyani


வணக்கம் நண்பர்களே. இன்று ஞாயிறு அல்லவா ?  ஒரு அட்டகாசமான பிரியாணி செய்ய கற்று கொள்வோமா ? கோழி பிரியாணி நம் அனைவரின் அபிமான அசைவ உணவாகும். ஆனால், கோழி பிரியாணி செய்தால் கோழிக் கறியில் உப்பு காரம் ஏறாமல் சப்புன்னு இருக்கிறது என்று பல தோழியர் ஆதங்க பட்டு கூறியுள்ளனர். இதை மனதிற் கொண்டு, இன்று நாம் ஒரு புது யுத்தியில் கோழி பிரியாணி செய்து பார்க்கலாம்

 
கோழி பிரியாணி

பிரியாணி செய்ய எடுக்கும் நேரம் மிக குறைவு தான் என்றாலும் அதற்கு உண்டான மசாலா பொருள்களை தயாரிக்க எடுக்கும் நேரம் அதிகம்.

 

தேவையான பொருள்கள் :


பாஸ்மதி அரிசி – 2 கப்

சூடான தண்ணீர் – 4 ½ கப்   

கோழி – ½ கிலோ; எலும்புடன் நடுத்தர துண்டுகளாக வெட்டியது

கெட்டி தயிர் – 3 தேக்கரண்டி

சமையல் எண்ணெய் – ¼  கப்

நெய் – 3 தேக்கரண்டி ( வெண்ணெயை கூட உபயோகிக்கலாம் )

பிரியாணி இலை – 1

அன்னாசி மொக்கு – 2

ஏலக்காய் – 2

பூண்டு – 6 பற்கள்; உரித்து நீளவாக்கில் வெட்டியது

பெரிய வெங்காயம் – 1; உரித்து நீளவாக்கில் வெட்டியது

பச்சை மிளகாய் – 3; நீளவாக்கில் வெட்டியது

புதினா இலைகள் ஒரு கைப்பிடி அளவு, கழுவி சுத்தம் செய்தது

மஞ்சள் தூள் – ½ மேஜை கரண்டி

மிளகாய் தூள் – 3 மேஜை கரண்டி

மல்லி தூள் – 3 மேஜை கரண்டி

கரம் மசாலா (அ) சிக்கன் மசாலா தூள் – 2 மேஜை கரண்டி

உப்பு தேவையான அளவு

எலுமிச்சை சாறு – 1 மேஜை கரண்டி

கொத்துமல்லி தழை அலங்கரிக்க



பசைஅ செய்ய :

கிராம்பு – 5

பட்டை – 1 இன்ச் நீள துண்டு

இஞ்சி – 2 இன்ச் நீள துண்டு

பூண்டு – 5 பற்கள்



பசைஆ செய்ய :

சின்ன வெங்காயம் – 10; உரித்தது



செய்முறை விளக்கம் :

 1. கோழியை மசாலா தடவி ஊற வைப்பதே முதல் வேலையாகும். ஒரு பாத்திரத்தில் கோழியுடன் ¼ மே.கரண்டி மஞ்சள் தூள், 2 மே.கரண்டி மிளகாய் தூள், 2 மே.கரண்டி மல்லி தூள், தயிர் மற்றும் தேவையான அளவு உப்பை சேர்த்து நன்கு பிசையுங்கள். இதை மூடி 1 மணி நேரத்துக்கு ஓரமாக வைத்து விடுங்கள். இந்த சமயத்தில் நாம் மற்ற ஆயத்தங்களை செய்து கொள்ளலாம் 


ஊற வைத்த கோழி துண்டுகள்

2. அரிசியை நன்கு கழுவி, 30 நிமிடம் ஊற போடுங்கள்.



3. பசை-அ செய்ய கொடுத்துள்ள பொருள்களை சிறிது நீர் சேர்த்து அரைத்து தனியே வைத்து கொள்ளுங்கள்.



4. சின்ன வெங்காயங்களை அரைத்து பசை-ஆ செய்யவும்.



5. ஒரு வாணலியில் 3 தேக்கரண்டி எண்ணெய் காய வைத்து, ஊறிய கோழியை அதில் இட்டு, நடுத்தர தீயில் வைத்து நன்கு வதக்க வேண்டும். கவனிக்க : இதை மூடி போட்டு வதக்கவோ, இதில் நீர் சேர்த்து சமைக்கவோ கூடாது


எண்ணையில் வதங்கும் கோழி

6. கோழித் துண்டுகள் பொன்னிறமானதும், அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும். இப்போது கோழியில் அனைத்து மசாலா பொருள்களும் நன்கு கலந்து இருக்கும். சுவைத்து பாருங்கள், உங்களுக்கே தெரியும். இந்த யுத்தியினால், சப்பென்ற கோழி பிரியாணிக்கு டாட்டா சொல்லி விடலாம்.





7. ஒரு குக்கர்-இல் மீதமிருக்கும் எண்ணெய் மற்றும் நெய்யை சூடாக்கவும்.



8.  அதில் பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி மொக்கை வறுக்க வேண்டும்



9. கிராம்பு வெடித்தவுடன்,  பூண்டு மற்றும் பச்சை மிளகாயை வதக்குங்கள்



10. பின்னர், நறுக்கிய பெரிய வெங்காயத்தை புதினா இலைகளுடன் சேர்த்து வதக்க வேண்டும்




11. வெங்காயம் பொன்னிறமானதும், இரண்டு பசைகளையும் சேர்க்கவும்



12. மீதமிருக்கும் மஞ்சள் தூள். மிளகாய் தூள், மல்லி தூள், சிக்கன் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்




13. இப்பொழுது, வறுத்த கோழி துண்டுகளை சேர்த்து, குறைந்த தணலில் 3 நிமிடங்கள் வதக்கவும் 




14. அரிசியை வடிகட்டி இந்த கலவையில் சேர்க்கவும். அரிசியுடன் மசாலா ஒன்றாகுமாறு நன்கு கலந்து விட வேண்டும். இவ்வாறு கலக்கும் போது மிக்க கவனம் தேவை. அரிசி நீண்ட நேரம் ஊறியிருப்பதால், உடையும் வாய்ப்புகள் அதிகம். இந்த முறையில் அரிசியானது, எண்ணையில் வறுபட்டு பிரியாணிக்கு நறுமணம் கொடுக்கிறது. இந்த ரிஸ்க் எடுத்து ரசக் சாப்பிட்டால், பிரியாணி மிக்க சுவையாக இருக்கும் என்பது உறுதி. இது தேவை இல்லை என்று நீங்கள் நினைத்தால், அரிசியை சேர்த்தவுடன் நீரை சேர்த்து விடலாம்




15. சுடு நீர் சேர்த்து கலந்து, இதில் எலுமிச்சை சாறு மற்றும் கிள்ளிய கொத்துமல்லி தழை சேர்க்கவும்



16. நீர் நன்கு கொதிக்க ஆரம்பித்தவுடன், உப்பு காரம் புளிப்பு சரி பார்க்கவும்.




17. அரிசி வெந்து தண்ணீர் வற்றும் வரை மூடி வைத்து சமைக்கவும்.




18. வெந்ததும் தீயை நிறுத்தி, பத்து நிமிடங்கள் கழித்து வெங்காயம், வெள்ளரிக்காய் மற்றும் தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.




விருப்பப்பட்டால் :
பிரியாணி பரிமாறும் போது வேக வைத்த முட்டையுடன் பரிமாறவும். இதுவே பாரம்பரிய கோழி பிரியாணி பரிமாறும் முறையாகும்.



கவனிக்க : 
நான் இந்த பிரியாணியை 'ரைஸ் குக்கர்'-இல் செய்ததால், ஒரு வாணலியில் அனைத்தையும் வதக்கி, அதன் பின்பு குக்கரில் இட்டு வேக வைத்தேன். ஆகையால் இங்கிருக்கும் படங்கள் வித்தியாசமாக இருக்கும். பொருத்தருள்க.




முக்கிய குறிப்பு :

இங்குள்ள படங்கள் அனைத்தும் காட்சிக்காக மட்டுமே. செய் பொருள்களின் அளவிற்கு அல்ல.




பிரியாணியை செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் தோழர்களே ! மீண்டும் ஒரு சுவையான உணவுடன் உங்களை பிறகு சந்திக்கும் வரை, அனைவருக்கும் கிருஸ்துமஸ் வாழ்த்துக்களுடன் விடை பெறுகிறேன்.



8 comments:

  1. வணக்கம்

    அருமையான விளக்க குறிப்பு...தொடர எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. வணக்கம்

    த.ம 1வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. வணக்கம் ரூபன், வருக !

    வாக்குக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் !

    ReplyDelete
  4. mathiyam lunchkku oru pidi pidikkanum!!!!

    ReplyDelete
  5. கொஞ்சம் வித்தியாசமா செய்முறை சொல்லி இருக்கீங்க செய்து பார்கிறேன் நன்றி ........

    ReplyDelete
  6. வாங்க ராஜசேகரன். பிடிச்சுட்டு உங்க கருத்துகளையும் சொல்லிட்டு போங்க ! நன்றி

    ReplyDelete
  7. ஜோஸ், வணக்கம் வாங்க. செய்து பார்த்து சுவை எப்படி இருக்குனு சொல்லுங்க. நன்றி

    ReplyDelete
  8. எளிமையாய்...தெளிவாய்..அழகாய் .விளக்கி இருக்குறீர்கள்..காபி போட தெரியாதவரும் கூட...உங்கள் செய்முறை..விளக்கம் பார்த்து..சிக்கன் பிரியாணியே..செய்து விடலாம் என்று தோன்றுகிறது...வாழ்த்துக்கள்...உங்களின் அடுத்த தகவலுக்கு...ஆவலுடன் காத்திருக்கிறோம்...நன்றி..

    ReplyDelete

 

வாசித்தவர்கள்

இன்று ...

உங்கள் ஆதரவால் ...!

tamil blogs traffic ranking