Social Icons

.

Wednesday, December 25, 2013

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் - ஒரு சிறப்பு பார்வை


Christmas - Amazing Facts

 
கிறிஸ்துமஸ் பற்றிய புனைவுகள்

## யேசு கிறிஸ்து டிசம்பர் 25 ம் தேதி பிறந்தவர் அல்லஅவர் கி.மு. 6-க்கும் கி.பி. 30-க்கும் இடையில், ஒரு செப்டம்பர் மாதத்தில் பிறந்தார் என்பது பல இறையியல் நிபுணர்களின் கணிப்பாகும்.

##  யேசு கிறிஸ்து பிறந்தது மர கொட்டகையில் அல்ல. ஒரு குகையின் உள்ளே என்பது பல பைபிள் பண்டிதர்களின் வாக்காகும்.

## 'மூன்று அறிவாளர்கள்' குழந்தை யேசுவை வழிபட்டனர் என்று கதைகளில் கூறப்பட்டாலும், பைபிளில் எண்ணிக்கை எதுவும் கொடுக்கப்படவில்லை. மத்தேயூவின் நல்வாக்கில் அறிவாளர்கள் என மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.

## 3 அரசர்கள் 12 நாள் அவகாசத்தில் குழந்தை யேசுவை கண்டுபிடித்தமையால், கிறிஸ்துமஸ் என்பது 12 நாட்களாக கொண்டாடப்படுகிறது.

##  அறிவாளர்களுக்கு யேசுவின் இருப்பிடத்தை காட்டிய "பெத்தலகேம்" நட்சத்திரம் ஒரு வால் நட்சத்திரம் அல்லது யுரேனஸ் கோளாக இருந்திருக்க கூடும் என வானியல் நிபுணர்கள் நம்புகிறார்கள்.


கிறிஸ்துமஸ்

##  கிறிஸ்துமஸ் என்ற சொல் புராதன ஆங்கிலத்தின் "கிறிஸ்டிஸ் மேஸீ" (Cristes Maesse) எனும் சொற்றொடரிலிருந்து வந்ததாகும். இதன் பொருள் கிறிஸ்துவின்  கூட்டம் (Christ's Mass) ஆகும்.

##  கிறிஸ்துமஸின் சுருக்கமான X-மஸ் என்பது மதத்திற்கு முரணானது அல்ல. கிரேக்க மொழியில் X என்பது யேசுவை குறிக்கும் குறிசொல்லாகும்.

##  அமெரிக்க புராதனவாதிகள் நன்றி நவிலும் நாளை  (Thanks Giving Day) கிறிஸ்துமஸை விட முக்கியமான பண்டிகையாய் கொண்டாட முயன்றார்கள்.

##  கி பி 440 ம் ஆண்டு வரை,  டிசம்பர் 25 ஆனது  யேசு கிறிஸ்துவின் பிறந்தநாளாக கொண்டாடப்படவில்லை என்பது ஒரு வரலாற்று உண்மை.


கிறிஸ்துமஸ் பாடல்கள்

##  13ம் நூற்றண்டில், அசிசியின் புனித 'ஃபாதர் ஃப்ரான்சிஸ்' என்பவர் அறிமுகப்படுத்தும் வரை,  "காரோல்" (Carols) எனப்படும் கிறித்துவ ஞானகீதம் தேவாலையங்களில் பாடப்படவில்லை.

##  "வஸைலிங்" (Wassailing) எனப்படும் ஆங்கில சம்பிரதாயதிற்கேற்ப, அக்கம்பக்கத்தோர் நல்வாழ்விற்கு பாடப்பட்ட வாழ்த்துப்பா தான் பின்னர் "காரோல்" எனப்படும் கிறித்துவ ஞானகீதம் ஆகியது.

##  கிறிஸ்துமஸின் போது பாடப்படும் புகழ்பெற்ற "ஜிங்கிள் பெல்ஸ்" (Jingle Bells) பாடல் தான் விண்வெளியில் ஒலிபரப்பப்பட்ட முதல் பாடலாகும். ஜெமினி 6 எனும் விண்கலத்தில் பயணம்செய்த "டாம் ஸ்டாஃபர்ட்" (Tom Stafford) மற்றும் "வாலி சிறா" (Wally Schirra) ஆகிய விண்வெளி வீரர்கள், இந்த பாடலை டிசம்பர் 16, 1695 ல் ஒலிபரப்பினார்கள்.


கிறிஸ்துமஸ் தகவல்கள்

##  ஒவ்வொரு டிசம்பர் 6 ஆம் தேதி பரிசுகள் வழங்கும் பழக்கமுள்ள "சின்டர்க்ளாஸ்" (Sinterklass) என அழைக்கப்பெற்ற 'புனித நிகோலாஸ்' அவர்களை பற்றிய நெதர்லாண்டின் நாட்டுப்புற கதையிலிருந்து தான் கிறிஸ்துமஸ் புகழ் "சான்டா க்ளாஸ்" (Santa Claus) தாத்தா பிறந்தார்.

##  உலகத்தின் மிக உயரமான 221 அடி உயர கிறிஸ்துமஸ் மரம் 1950 ம் ஆண்டு வாஷிங்டன் வணிக வளாகத்தில் நிறுவப்பட்டது. 

##  கிறிஸ்துமஸ் மரத்தின் அநேக பகுதிகள் உண்ணத் தகுந்ததாகும். குறிப்பாக அதன் கூர் முனை இலைகள் வைட்டமின் "சி" சத்துக்கள் நிறைந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

##  சந்தைக்கு விற்பனைக்கு வரும் முன்னால், கிறிஸ்துமஸ் மரம் சுமார் 15 ஆண்டுகள் வளர்க்கப்படுகிறது.

##  சுற்றுசூழல்வாதி ஆகிய அமெரிக்க அதிபர் "டெடி ரூஸ்வெல்ட்" (Teddy Roosevelt) 1912 ஆம் ஆண்டு, வெள்ளை மாளிகையில் கிறிஸ்துமஸ் மரங்கள் நிறுவுவதை தடை செய்தார்.



##  12 ஆம் நூற்றண்டில் ஃப்ரென்சு கன்னிகாஸ்த்ரீகள் ஏழைகள் வீட்டு வாசலில், காலுறையின் உள்ளே பழங்கள், உலர் பழங்கள் மற்றும் சிறிய ஆரஞ்சு சுளைகள் வைத்து கதவில் மாட்டிவிட்டு வந்த பழக்கம், பின்னர் காலுறையின் உள்ளே ஆரஞ்சு சுளைகள் வைக்கும் ஒரு கிறிஸ்துமஸ் மரபாக மாறிவிட்டது.

##  பண்டிகையின்  சிறப்புகளில் ஒன்றான கிறிஸ்துமஸ் பிட்டு, தொன்மையில் திராட்சை மற்றும் திராட்சை ரசமான மதுவை கொண்டு செய்யப்படும் "சூப்" ஆக தான் இருந்தது.

##  1938 இல் ஓர் அமெரிக்க நிறுவனத்தின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது உருவாக்கபட்ட கண்டுபிடிப்பு தான் "ருடால்ஃப்" (Rudolph) எனப்படும் சிவந்த மூக்கு கொண்ட பனி கலைமான்.

##  நம் பூமியில் கிறிஸ்துமஸ் எனும் பெயர் கொண்ட இரு தீவுகள் உள்ளன. ஒன்று பசிபிக் பெருங்கடலில் உள்ள (முன்னர் "கிறிட்டி மாட்டி" என அழைக்கப்பெற்ற) கிறிஸ்துமஸ் தீவு. மற்றொன்று இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள கிறிஸ்துமஸ் தீவு.



1 comment:

  1. Superb Yazhini :) :) :) more informative... thank you so much
    -Paul

    ReplyDelete

 

வாசித்தவர்கள்

இன்று ...

உங்கள் ஆதரவால் ...!

tamil blogs traffic ranking