ஃப்ரென்சு "மேனிக்யூர்"
எவ்வாறு செய்து கொள்வது ?
எவ்வாறு செய்து கொள்வது ?
ஃப்ரென்சு முறையில் கை மற்றும் நகத்தை எப்படி பராமரிப்பது ?
படி #1
உங்களுக்கு தேவைப்படும் பொருள்கள் :
அடித்தள பூச்சு (அ) முகப்பு பூச்சு
நிறத்திற்கான "வார்னிஷ்"
ஒரு மேல் பூச்சு
வெள்ளை (அ) க்ரீம் "வார்னிஷ்"
நகத்தில் பயன்படும் "வார்னிஷ்" நீக்கி
ஏதேனும் நக கணு (அ) சமையல் எண்ணை
நக கணுவில் பயன்படும் சிறிய குச்சி
ஒரு "எமெரி" அட்டை
சிறிது பஞ்சு
சிறிய அளவு கை மற்றும் நக "மாய்ஸ்ச்சரைசர்"
படி # 2
நேரம் ஒதுக்கி "மேனிக்யூர்" செய்துகொள்ளுங்கள்.
அவசரத்தில் செய்துகொள்ளும் போது, நிலைமை முற்றிலும் விரும்பத்தகாததாக அமையும். போதுமான நேரம் ஒதுக்கி செய்தால், விளைவும் நன்றாக இருக்கும், இறுதி வரை நீடிக்கவும் செய்யும்.
படி # 3
நக "வார்னிஷ்" நீக்கி
ஒரு பஞ்சு துண்டால் உங்கள் நகத்தில் உள்ள பழைய நக "வார்னிஷை" ஏதேனும் ஒரு "வார்னிஷ்" நீக்கியால் துடைத்து எடுக்கவும்.
படி # 4
படி # 4
நகக்கணு எண்ணெய்
நகத்தின் விளிம்பில் சிறிது நகக்கணு எண்ணெய் விட்டு நன்கு மசாஜ் செய்து கொள்ளவும்.
பின்பு சற்று நேரம் எண்ணெய்யை ஊற விட்டால் , உங்கள் நகம் மிருதுவாகி விடும்.
நகக்கணு கிட்டாத பட்சத்தில், ஆலிவ் எண்ணெய் அல்லது சமையல் எண்ணெய்யை பயன்படுத்தலாம்.
படி # 5
நக வடிவம் நன்றாவதற்கு
வார்னிஷ் செய்தாலும் நகத்தின் வடிவம் கோணல் மாணலாக இருந்தால் பயனில்லை, ஆகையால் "எமெரி" பட்டையை கொண்டு நீங்கள் விரும்பும் வடிவம் பெறும் வரை நகத்தை சீராக்குங்கள். நினைவிருக்கட்டும், "எமெரி" பட்டையை மாற்று திசையில் தேய்க்காமல் ஒரே திசையில் தேய்க்க வேண்டும்.
படி # 6
நகக்கணுக்களை பராமரித்தல்
நகத்தின் நுணியில் நம் சருமம் சேரும் பகுதியை தான் நகக்கணு என்கிறோம்.
நகக்கணு நகத்தின் பகுதியே ஆனாலும், அது எண்ணெய் பசையுடன் இருந்தால், நீங்கள் பயன்படுத்தும் "வார்னிஷ்" நகத்தில் அதிக நேரம் நீடிக்காது.
ஆகையால் நகக்கணுவை மென்மையாக வைத்து கொள்ள, 10 - 15 நிமிடங்கள் அதை வெதுவெதுப்பான வெந்நீரில் ஊற வைக்கவும். இதற்கு சிறந்த மாற்று வழி நகக்கணு நீக்கி பயன்படுத்துவது தான். பின்பு உங்கள் கையில் சிறிது "மாய்ஸ்ச்சரைசர்" பயன்படுத்தி, ஒரு 15 நிமிடங்கள் பற்றியிருக்கும் படி படலத்தை வைத்து நகத்தை போர்த்தி விடவும்.
இவ்வாறு செய்வதால், நகக்கணு மிருதுவாகும் மற்றும் ஈரப்பதம் கிடைக்கும்.
கெட்டு போன நகக்கணுக்களை நீக்க "க்யூட்டிகிள்" குச்சியை சிறிய வட்டமாக தேய்த்தால், பழைய நகக்கணுக்கள் நீங்கும்.
படி # 7
கை கழுவுதல்
நகத்தில் அழுக்கு மற்றும் தூசி எதுவும் படிந்து விடாதபடி, நன்கு கழுவி விடவும்.
பின்பு சிறிது வார்னிஷ் நீக்கியை கொண்டு, மீண்டும் நகத்தை சுத்தப்படுத்தவும், இவ்வாறு செய்வதால் எண்ணெய் பதம் நீங்கும்.
படி # 8
நகத்தில் அடிப்படை பூச்சு
பாட்டிலில் விளிம்பில் உள்ள உபரியை நன்கு துடைத்தி எடுத்து விடவும்.
ஜாக்கிரதையாக 2-3 பூச்சுகளை இடவும்.
இவ்வாறு செய்வதால், பழைய வண்ண வார்னிஷ் துகள்கள் நீங்கி,உங்கள் நகத்தை பாதுகாக்கிறது.
படி # 9
நகத்தின் நுணியிற்கான பூச்சு
நுணி நகத்தில் பிங்க், அல்லது வெள்ளை நிற பூச்சுகளை பயன்படுத்தலாம்.
ஆயினும் க்ரீம் நிற பூச்சு வெள்ளையை விட இயற்கையான தோற்றத்தை அளிக்கிறது.
நக முனையை சுற்றி வார்னிஷால் கோடு வரைந்து கொள்ளவும்.
முதலில் வரைந்த கோடு நேர் வடிவமாக அமையவில்லை என்றால், அதை சற்று காய வைத்து விட்டு, மீண்டும் ஒரு முறை நேரான கோடு வரைந்து கொள்ளவும்.
நக வார்னிஷின் அடுத்த பூச்சிற்கு முன், ஏற்கெனவே பூசியது நன்கு காய வேண்டும் என்பது அவசியம்.
கடைகளில் கிடைக்கும் சில வார்னிஷ் பாக்கில், நக நுணியில் பூசிடும் வண்ணம் அமைந்த "ஸ்டிக்கர்" களும் இருக்கும்.
அந்த "ஸ்டிக்கர்களை" பயன்படுத்தினால், நக நுணியின் மீது நேரான கோடு அமைக்க மிகவும் ஏதுவாக இருக்கும்.
நுணி பூச்சு இன்னமும் சரியாக அமைய, கார்ட்போர்ட் அட்டையை டைமண்டு வடிவில் வெட்டி நகத்தில் அதை வைத்து பூசினால், பூச்சு நகத்தை தாண்டி சருமம் மீது படாமல் தடுக்கலாம்.
படி # 10
வண்ணப்பூச்சு
அடுத்து வண்ண நிற வார்னிஷ் பயன்படுத்தவும்.
ப்ருஷ்ஷில் அளவு மிகாமல் பார்த்துக்கொள்ளவும்.
நிறத்தின் அழுத்தம் கூட்ட வேண்டுமென்றால் 2 அல்லது 3 பூச்சுகள் பூசலாம்.
ஆனால் முதல் பூச்சு நன்கு காய்ந்த பிறகு, இரண்டாம் பூச்சை பூசவும்.
ஃப்ரென்சு மேனிக்யூர் முறையில் பிங்க் மற்றும் வெள்ளை நிறம் தான் சிறந்ததாக கருதப்படுகிறது.
படி # 11
நகத்தில் மேல் பூச்சு
மேல் பூச்சு உறுதியானதாகும், மேலும் இது அடிப்படை பூச்சை முழுமையாக காத்து, நிறத்தையும் பேணுகிறது.
படி # 12
நன்கு காயவிடவும்.
ஃப்ரெஞ்சு மேனிக்யூர் நல்ல பலன் அளிக்க வேண்டும் என்றால், பூச்சு காய்ந்ததா என்று பார்பதற்கு முன் 5 நிமிடங்கள் காத்திருக்கவும்.
பூச்சு காய்ந்துவிட்டதா என அறிந்து கொள்ள, நகத்தின் மீது உங்கள் நாக்கால் லேசாக தடவி பார்க்கவும், வார்னிஷின் சுவை உணர முடிந்தால் இன்னும் அது காயவில்லை என்று பொருள்.
இன்னமும் காயவில்லை என்று தோன்றினால், சிறிது நகக்கணு எண்ணெய் விடவும், இவ்வாறு செய்தால், நீங்கள் அணிந்திருக்கும் உடை மீது பூச்சு ஒட்டாமல் இருக்கும்.
படி # 13
சுத்தப்படுத்துதல்
நகத்தின் வார்னிஷ் அல்லது பூச்சு ஒன்றுக்கொன்று கலந்து விட்டால், ஏற்கெனவே பூசியதை முற்றிலும் நீக்கி சுத்தம் செய்து, மீண்டும் பூச வேண்டும்.
ஆயினும், நகத்தை சுற்றியுள்ள சருமத்தில் பூச்சு ப்டிந்துவிட்டால், சிறிது வார்னிஷை னகத்தை சுற்றிலும் பயன்படுத்தவும்.பின்பு நகக்கணு குச்சியுடன் சிறிது பஞ்சு எடுத்துக்கொண்டு, துடைத்து எடுக்கவும்.
படி # 14
வார்னிஷ் பாட்டிலை பத்திரப்படுத்துதல்
பேப்பர் டிஷ்யுவில் கொஞ்சம் வார்னிஷ் நீக்கியை விட்டுக்கொண்டு, பாட்டிலின் முனையை சுத்தப்படுத்தவும்.
இவ்வாறு செய்தால், அடுத்த முறை பாட்டில் மூடி அழுத்தி மூடிக்கொள்ளாமல் தவிர்க்கலாம்.
ஆஹா!நகத்துக்கு இவ்வளவு விஷயம் இருக்கா?
ReplyDeleteஅடேங்கப்பா?
வணக்கம் கோகுல் வாங்க ! உங்கள் கருத்திற்கு நன்றி !
ReplyDeleteநகம் நம் உடலின் மிக முக்கியமான ஒரு பகுதி ஆகும். அதை பேணி காப்பதில் கவனம் செலுத்துவது அவசியம் .
பெண்கள் மட்டுமே மேனிக்யூர் பண்ணவேண்டும் என்று ஒரு தவறான கருத்து நிலவி வருகிறது. ஆனால் எல்லோரும் இந்த மேனிக்யூர் செய்ய வேண்டும் என்பது என் கோரிக்கை.
ஆண்கள், நகப்பூச்சு பூசி கொள்ளும் பகுதியை மட்டும் நீக்கி விட்டு மற்ற எல்லாவரையும் செய்து கொண்டு நகங்களை ஆரோக்கியமாக வைத்து கொள்ள வேண்டியது மிக முக்கியம் !
///பெண்கள் மட்டுமே மேனிக்யூர் பண்ணவேண்டும் என்று ஒரு தவறான கருத்து நிலவி வருகிறது. ஆனால் எல்லோரும் இந்த மேனிக்யூர் செய்ய வேண்டும் என்பது என் கோரிக்கை. ////
ReplyDeleteபோங்க அக்கா நீங்க வேற நாங்க வேவ்(முகச்சவரம்) செய்யவே நேரம் இல்லாம தாடியோட திரியுறம் கேட்டா நாலுநாள் தாடி விடுறது ஸ்டையில் என்று ஒரு பிட்டைப்போட்டு சமாளிக்குறம்..இதுல எங்க நகத்துக்கு பூச்சு பூசுறது...
நல்ல ஒரு பதிவு மேக்கப் விரும்பிகளுக்கு பயனுள்ள பதிவு...வாழ்த்துக்கள்
ReplyDeleteஹையா நானும் மேனிக்யூர் பண்ண போறேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்
ReplyDeleteமேக்கப் விரும்பிகளுக்கு பயனுள்ள பதிவு
ReplyDeleteஇனிய இரவு வணக்கம் தங்கையே,
ReplyDeleteஆமா, நான் ரூட் மாறி வந்திட்டேனா..
அவ்வ்வ்வ்வ்வ்வ்
நக அழகை விரும்பும் நங்கையர்க்கு பயனுள்ள பதிவு என்று மாத்திரம் சொல்ல முடிகிறது.
ReplyDeleteநகத்துக்கு இவ்வளவு விஷயம் இருக்கா?..நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...
ReplyDeleteஎன்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்... www.rishvan.com
வருகை தந்த அனைவருக்கும் எங்கள் நன்றிகள்
ReplyDelete