Social Icons

.

Saturday, April 27, 2013

கொண்டை கடலை கறி



கொண்டை கடலை கறி

கருப்பு கொண்டை கடலை, அவரை குடும்பத்தை சேர்ந்தது. மிகவும் தொன்மை வாய்ந்த பயிரான இது சுமார் 7500 ஆண்டுகளுக்கு முன்பு சில மத்திய கிழக்கு நாடுகளில் பயிரிடப்பட்டது. இன்றும் பாரம்பரிய சமையல்களில் இடம் வகிக்கும் இது, புரதச் சத்து நிறைந்தது. ஊட்டச்சத்துக்களான இரும்பு, துத்தநாகம், பாஸ்பரஸ் ஆகியவற்றுடன் நார்சத்தும் நிரம்பி இருக்கும் கொண்டை கடலையின் மிக முக்கியமான ஆற்றல் என்ன தெரியுமா ?  நம் ரத்தக் குழாய்களில் உறைந்திருக்கும் தேவை இல்லாத கொழுப்பை கறைப்பது தான். வாரம் ஒரு முறையேனும்  இதை உண்ண வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துறைக்கிறார்கள்.

வாருங்கள் நண்பர்களே, கொண்டை கடலை கறி எவ்வாறு செய்வது என்று கற்றுக் கொள்வோம்.


தேவையான பொருள்கள் :


கருப்பு கொண்டை கடலை - 1 கப்
சமையல் எண்ணெய் - 1/4 கப்
துருவிய தேங்காய் - 1/4 கப்
கெட்டி தேங்காய் பால் - 1/4 கப்
இஞ்சி - 1 இன்ச் நீள துண்டு, பொடியாக அரிந்தது
பூண்டு - 5 பல், உறித்தது
காய்ந்த மிளகாய் - 3 
காய்ந்த மல்லி - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
மல்லி தூள் - 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 10 
லவங்கம் - 3 
பட்டை - 1 இன்ச் துண்டு
ஏலக்காய் - 2 
கறிவேப்பிலை - 2 கொத்து
கொத்தமல்லி தழை - அலங்கரிக்க
உப்பு - சுவைக்கேற்ப


செய்முறை :


1) கடலையை முதல் நால் இரவே ஊற போட வேண்டும். குறைந்த பட்சம் 8 மணி நேரமாவது ஊற வேண்டும். 

2) மறுநாள் காலை குக்கரில் கடலையை உப்பு சேர்த்து வேக வைக்க வேண்டும். 5 விசில் வந்த பின்பு தணலை குறைத்து மேலும் 2 விசில் (அல்லது) 10 நிமிடம் சமைக்க வேண்டும்.

3) ஒரு வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெயை சுட வைத்து, உரித்த பூண்டு, காய்ந்த மல்லி, காய்ந்த மிளகாய் மற்றும் 5 சின்ன வெங்காயம் தாளிக்க வேண்டும்.

4) பொன்னிறமானதும் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி, ஒரு கொத்து கறிவேப்பிலையை கிள்ளி போட்டு அடுப்பை அணைக்க வேண்டும்.

5) அதில், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா தூள் சேர்த்து சூட்டிலேயே நன்கு கிளறி ஆற விட வேண்டும். ஆறியதும், பசை போல் அரைத்து கொள்ள வேண்டும்.

6) இந்த பசையை குக்கரில் உள்ள வெந்த கடலையுடன் உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வேக விடவும்.

7) பின்னர் தேங்காய் பால் சேர்த்து கெட்டியாக திரண்டு வரும் வரை சமைக்கவும்.

8) தாளித்தல் : ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானவுடன், லவங்கம், பட்டை, ஏலக்காய், பொடியாக அரிந்த 5 சின்ன வெங்காயம், பொடியாக நறுக்கிய இஞ்சி, 1 கொத்து கறிவேப்பிலை ஆகியவற்றை தாளித்து கறியில் ஊற்றி சுருளக் கிளறி இறக்கவேண்டும்.

9) கொத்தமல்லி இலை தூவி அலங்கரித்து சூடான சாதம் அல்லது ரொட்டியுடன் பரிமாறவும்.

10) விருப்பப் பட்டால் , மேலும் சுவை கூட்ட எலுமிச்சையை பிழிந்து பொடியாக நறுக்கிய வெங்காயம் தூவி பரிமாறலாம்.  


4 comments:

  1. உங்கள் பெயரைபோல கொண்டைகடலை கறியும் நன்றாகவே இருக்கும்

    ReplyDelete
  2. மீண்டும் உங்களின் சமயத் குறிப்பு பற்றி பிரசுரிப்பதற்கு நன்றி யாழினி

    ReplyDelete
  3. ரெசிப்பி அருமையாக இருக்கிறது யாழினி, விரைவில் இதை முயற்சி செய்து பார்க்கிறேன்! :)

    ReplyDelete
  4. வருகை தந்து பாராட்டிய உங்களுக்கு நன்றிகள்

    ReplyDelete

 

வாசித்தவர்கள்

இன்று ...

உங்கள் ஆதரவால் ...!

tamil blogs traffic ranking